Home அரசியல் சிக்கலில் தலைமைச் செயலாளர்…

சிக்கலில் தலைமைச் செயலாளர்…

24
0
SHARE

தாத்தாவுக்கு கோபம் தணியவில்லை. தமிழ்நாட்டில் நிர்வாகம் முடங்கி போய், மக்கள் தவிக்கிறார்கள். இதற்கு நடவடிக்கை எடுக்க மறுக்கும் மத்திய அரசு வருமானவரித்துறை ரெய்டு என்ற பெயரில் அடிக்கும் கூத்தை சிகிக்க முடியவில்லை.

மத்தியநிதித்துறைசெயலாளர்குஜராத்தைசேர்ந்தவர், அவர் சசிகலா குடும்பத்தினர் மீது வருமான வரித்துறை ரெய்டு தொடர்பாக பிரதமருக்கு மட்டுமே தெரிவித்தார். அமைச்சர் அருண் ஜெட்லிக்கு முழுவிவரம் தெரியாது. ஆனால் தமிழக முதல்வருக்கு மட்டும் நிதித்துறை செயலாளர் ரெய்டு தகவல்களை முன் கூட்டியே கூறிவிட்டார் என்று சத்தம் அதிகமாக முணு முணுத்தார் தாத்தா.

   இரட்டை இலை சின்னம் விவகாரம் தேர்தல் ஆணையத்தில் தாமதம் ஆவதால், எடப்பாடி பழனிசாமி, .பன்னீர்செல்வம் அ.தி.மு..வில் உள்ள நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.  விசாரணை ஒத்தி வைக்கப்படும் போதும், ‘அடுத்த விசாரணையின் போது, சின்னம் கிடைத்து விடும்என, .தி.மு.., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நம்பினர் ஆனால், விசாரணை நீண்டது.

ஒருவழியாக, நவ., 8ல், இரு தரப்பு விசாரணையும் நிறைவடைந்தது. விசாரணையை முடித்துள்ள தேர்தல் கமிஷன், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்து உள்ளது.  ஆனால் 13ம் தேதி வரை எழுத்து மூலம் தாக்கல் செய்ய அவகாசம் கொடுத்துள்ளது. தீர்ப்பு எப்போது வரும் என, தெரியாததால், .தி.மு.., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சோர்வடைந்து உள்ளனர். சின்னம் கிடைப்பது  தாமதமானால், கட்சியில் குழப்பங்கள் அதிகரிக்கும். விரைவில் சின்னம் கிடைத்து விட்டால், கட்சியை ஒழுங்குபடுத்தி, தேர்தலுக்கு தயாராக முடியும்.

  இதற்காக, ‘இரட்டை இலை நமக்கே கிடைக்கும்என்ற நம்பிக்கையோடு, முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர் செல்வமும், தீர்ப்பை எதிர்பார்த்து உள்ளனர். அதேநேரம், தினகரன் தரப்பினர், இரட்டை இலை தங்களுக்கு கிடைக்கா விட்டால், உச்ச நீதிமன்றம் சென்று தடை வாங்க முடிவு  செய்துள்ளார்கள். அதனால் இனி இரட்டை இலை சின்னம் தமிழ்நாட்டில் இல்லை என்று நிலைதான் ஏற்படும் என்று தாத்தா, இளைஞர்களிடம் இரட்டை இலை சின்னம் தொடர்பான செய்திகளை கூறினார்.

   அடுத்த செய்தி..செய்தி திருப்பரங்குன்றம் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில், .தி.மு.. சார்பில், போஸ், தி.மு.. சார்பில்  டாக்டர் சரவணன் போட்டியிட்டனர். போஸ் வெற்றி பெற்றார். ‘இவரது வெற்றி செல்லாதுஎன, அறிவிக்கக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், தி.மு.., வேட்பாளர் சரவணன், தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார். இதையடுத்து, தி.மு.., மருத்துவ அணி சார்பில், தலைமை செயலரிடம் அளித்த மனு சென்னை, அப்போலோ மருத்துவமனையில், ஜெ., சிகிச்சை பெற்றபோது, வேட்பாளராக போஸ் போட்டியிடவும், அவருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கவும், சில படிவங்களில், ஜெ., கைரேகை பெறப்பட்டு, தேர்தல் கமிஷனிடம் அளிக்கப்பட்டது. ஆனால், ‘படிவத்தில் உள்ளது, அவரது கைரேகையே இல்லைஎன, தடய அறிவியல் துறையின் ஓய்வுபெற்ற அதிகாரி அறிக்கை அளித்துள்ளார்.

இவ்வழக்கு தொடர்பான விசாரணைக்கு, ஜெயலலிதா பெயரில் உள்ள சொத்து பத்திரங்களில், பதிவு செய்யப்பட்டுள்ள கைரேகை, பாஸ்போர்ட், ஆதார் கார்டில் உள்ள கைரேகை தேவைப்படுகிறது.

இதில், ஏதாவது ஒரு பதிவை தந்தால், அதை வைத்து, சந்தேகத்துக்குரிய கைரேகையை பரிசோதித்து, வழக்கின் தன்மைக்கு ஆதாரமாக காட்டுவதற்கு உதவும். எனவே, அதை வழங்க, தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு என்ன பதில் தருவது என்று தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் குழப்பத்தில் உள்ளார். முதல்வரின் முதன்மை செயலாளர் தலைமைச் செயலாளரிடம் சொத்துப்பத்திரங்கள் பதிவை தர வேண்டாம், என்று முதல்வர் சொல்ல சொன்னதாக கூறியுள்ளார். இதனால் சிக்கில் சிக்கி தவித்துக்கொண்டு இருக்கிறார் தலைமைச் செயலாளர்.

   ஒரு சின்ன தகவல்.மக்கள்  மொபைல் தொலைபேசி மூலமே அனைத்து பணப்பரிவர்த்தனைகளும் செய்து வருகிறார்கள்.  இந்தியாவின் மக்கள் தொகையில் 72 சதவீதம் பேர் 32 வயதுக்குட்பட்டவர்களாக இருப்பதால் புதிய தொழில்நுட்பங்களை வேகமாக கற்றுக் கொள்ள முடிகிறது . படிப்படியாக அடுத்த 4 ஆண்டுகளில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் தயாரிப்பது குறைக்கப்படும்.

வங்கிகளுடன் மொபைல் எண்கள் இணைக்கப்படுவதால் அனைத்து பரிவர்த்தனைகளும் அதன் மூலமே நடைபெறும் என்ற செய்தியை சொன்னவுடன், இளைஞர்கள் இனி இந்தியா உருப்படாது என்று முனகியவாறு புறப்பட்டார்கள்.