Home உலகம் உலகை சுற்றி..!

உலகை சுற்றி..!

7
0
SHARE

* எளிதில் பாதிக்கப்படக் கூடியவர்கள் தங்கள் தற்கொலை எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளக்கூடிய வலைத்தளங்களை தடை செய்ய உள்ளதாக ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது. இந்த வலைத்தளங்களைப் பயன்படுத்தி தொடர் கொலைகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது.

* .எஸ். பயங்கரவாத குழுவிற்கு ஆட்களைச் சேர்க்கும் ஒரு பிரசார பாடல், மிக்ஸ் மெகாபோல் என்ற ஸ்வீடனின் மிகமுக்கிய வானொலியில் 30 நிமிடம் ஒலிபரப்பானது. இது ஐ.எஸ். பயங்கரவாதிகளின் சதி என வானொலி நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

* பிலிப்பைன்ஸ் நாட்டில் ராணுவ வீரர்கள் 6 பேரை கொன்று குவித்து ஐ.எஸ். பயங்கரவாதிகள் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர்.

* 43 ஆண்டுகளுக்கு பிறகு கொல்கத்தா வங்கதேசம் இடையே மீண்டும் ரெயில் சேவை போக்குவரத்து தொடங்கியது.

* தனது 10 வயதில் ஒருவரை கத்தியால் குத்தி கொன்றதாக பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டி பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here