Home உலகம் வடகொரியாவுக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் அதிபர் டிரம்ப் வலியுறுத்தல்

வடகொரியாவுக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் அதிபர் டிரம்ப் வலியுறுத்தல்

9
0
SHARE

தனாங், நவ.12&

வடகொரியாவுக்கு எதிராக, பிராந்திய நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தினார்.

கொரிய தீபகற்ப பகுதியில் தொடர்ந்து அச்சுறுத்தலாக விளங்கி வரும் வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகளை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகளின் ஆதரவை பெறும் நோக்கில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக ஆசிய நாடுகளுக்கு 12 நாள் சுற்றுப்பயணத்தை அவர் மேற்கொண்டுள்ளார்.

இந்தபயணத்தில்தென்கொரியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றார். இதனை முடித்துவிட்டு, டிரம்ப் வியட்னாம் சென்றார்.

அங்குள்ள கடற்கரை நகரான தனாங்கில் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு கூட்டத்தில் கலந்துகொண்டு அதிபர் டிரம்ப் உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், ”ஒரு சர்வாதிகாரியின் வன்முறை மற்றும் அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு அனைத்து பிராந்தியமும், அங்கு வசிக்கும் மக்களின் எதிர்காலமும் பிணைக்கைதிகளாக சிக்கிவிடக்கூடாது.

வட கொரியாவுக்கு எதிராக இந்த பிராந்திய நாடுகள் ஒன்றிணைய வேண்டும்.” என்றார். ஆசிய பசிபிக்  நாடுகளுடன் தனிப்பட்ட வர்த்தகத்தில் ஈடுபட அமெரிக்கா தயாராகி விட்டதாக டிரம்ப் கூறினார்.

மேலும்வர்த்தக விதிமுறைகளை அமெரிக்காவுடன் வரத்தகம் செய்யும் நாடுகள் உண்மையாக கடைப்பிடிக்க வேண்டும் என்று அமெரிக்கா எதிர்பார்க்கிறது. நீண்டகால வர்த்தக முறைகேடுகளை அமெரிக்கா ஒருபோதும் சகித்துக்கொள்ளாதுஎன்றும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக டிரான்ஸ் பசிபிக் நாடுகளின் கூட்டமைப்பில் உறுப்பு நாடாக அமெரிக்கா இருந்தபோது, டிரம்ப் அதிபராக பொறுப்பேற்றதும், அந்த கூட்டமைப்பில் இருந்து அமெரிக்காவை விடுவித்துக்கொண்டார்.

இதனால் டிரான்ஸ் பசிபிக் அமைப்பு நாடுகள் அமெரிக்கா இல்லாமல் தங்களுக்குள் வர்த்தக உடன்படிக்கைகளை துவக்கி வருகின்றன.

அமெரிக்க புதிய வர்த்தக உடன்படிக்கைக்காக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது

இந்த நிலையில், டிரம்ப் ஆசிய பசிபிக் பொருளாதார மன்றத்துடன் வர்த்தக உறவை மேற்கொள்ள முன்வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here