Home உலகம் இரட்டை குடியுரிமை சர்ச்சை ஆஸ்திரேலியாவில் மேலும் ஒரு எம்.பி. ராஜினாமா

இரட்டை குடியுரிமை சர்ச்சை ஆஸ்திரேலியாவில் மேலும் ஒரு எம்.பி. ராஜினாமா

10
0
SHARE

சிட்னி, நவ.12&

ஆஸ்திரேலிய நாட்டின் அரசியலைப்பு சட்டப்படி, இரட்டை குடியுரிமை வைத்துள்ள நபர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது. தற்போது இந்த விவகாரம் பூதாகரம் ஆகி வருகிறது.

இதனால் இரட்டை குடியுரிமை உள்ள அரசியல்வாதிகள், தங்களின் குடியுரிமை குறித்த தகவலை வெளிப்படையாக செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இந்த விவகாரத்தில் சிக்கி, ஏற்கனவே அந்நாட்டின் துணை பிரதமர் பர்னபி ஜாய்ஸ் உள்ளிட்ட 3 எம்.பி.க்கள் அக்டோபர் மாதம் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர்.

மேலும் 2 பேர் ராஜினாமா செய்தனர். இதனால், பிரதமர் மால்கம் டர்ன்புல்லின் அரசாங்கத்திற்கு பின்னடைவு ஏற்பட்டது. மெஜாரிட்டியைவிட ஒரே ஒரு இடம் மட்டுமே அதிகம் இருந்தது. ஜாய்ஸ் தனது நியூசிலாந்து குடியுரிமையை ஏற்கனவே திருப்பி அளித்துவிட்டதால், அவரால் இடைத் தேர்தலில் ஜாய்ஸ் மீண்டும் போட்டியிட முடியும்.

இந்த நிலையில், இரட்டைக் குடியுரிமை விவகாரத்தில் சிக்கிய மற்றொரு எம்.பி.யான ஜான் அலெக்சாண்டர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தன் பதவியை ராஜினாமா செய்தார்.

இதனால் ஆளும் கூட்டணிக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here