Home விளையாட்டு ஏ.டி.பி. சேலஞ்சர் கோப்பை பெயஸ் ஜோடி தோல்வி

ஏ.டி.பி. சேலஞ்சர் கோப்பை பெயஸ் ஜோடி தோல்வி

5
0
SHARE

நாக்ஸ்வில், நவ.12&

.டி.பி. சேலஞ்சர் டென்னிஸ் தொடர் போட்டிகள் அமெரிக்காவில் உள்ள நாக்ஸ்வில் நகரில் நடைபெற்று வருகிறது.

இத்தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதி சுற்று போட்டியில் முதல்நிலை ஜோடியான இந்தியாவின் லியாண்டர் பயஸ்  பூரவ் ராஜா ஜோடி, மார்கஸ் வில்லிஸ்  லியாம் பிராடே ஜோடியை எதிர்கொண்டது.

இப்போட்டியின் முதல் செட்டை 7&5 என இந்திய ஜோடி கைப்பற்றியது. தொடர்ந்து அதிரடியாக விளையாடிய அந்த ஜோடி இரண்டாவது செட்டையும் 6&0 என கைப்பற்றியது.

இதன்மூலம் 7&5, 6&0 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற லியாண்டர் பயஸ்  பூரவ் ராஜா ஜோடி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது. இந்திய ஜோடி அடுத்த சுற்று போட்டியில் மூன்றாம் நிலை ஜோடியான தென்னாப்பிரிக்காவின் ருவான் ரொயிலொப்ஸ்  பிரட்டனின் ஜோ சலிஸ்பரியை எதிர்கொள்ள இருக்கிறது.

ஜப்பானில் நடைபெற்று வரும் ஏ.டி.பி. சேலஞ்சர் டென்னிஸ் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டிக்கு இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன்  இந்தோனேசியாவின் கிரிஸ்டோபெர் ரங்கட் ஜோடி முன்னேறியது.

அந்த ஜோடி அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் போல்ட்  பிராட்லி மவுஸ்லே ஜோடியை 6&7, 6&4, 10&7 என்ற செட் கணக்கில் வீழ்த்தியது. நெடுஞ்செழியன்  கிரிஸ்டோபெர் ஜோடி இறுதிப்போட்டியில் ஜப்பானின் பென் மெக்லச்லென், யசுடாகா யுசியாமா ஜோடியை எதிர்கொள்கிறது.

இதையடுத்து அரையிறுதி ஆட்டத்தில் பெயஸ், பூரவ் ராஜா ஜோடி, இங்கிலாந்தின் ஜோ சாலிஸ்புரி, தென் ஆப்பிரிக்க வீரர் ரூவன் ரோலோப்ஸ் ஜோடியை எதிர்கொண்டது. பலராலும் எதிர்பார்க்கப்பட்டது போல் இந்த ஆட்டத்தில் அனல் பறந்தது.

இருப்பினும் முதல் செட்டை பெயஸ் ஜோடி, 7&6 என்ற கணக்கில் இழந்தது. தொடர்ந்து இரண்டாவது செட்டையும் 6&3 என்ற கணக்கில் இழந்து, நேர் செட் கணக்கில் தோல்வியை தழுவியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here