Home விளையாட்டு ‘ஆஷஸ் சும்மா.. இந்தியா, பாக்.. போல் வருமா?’சொல்கிறார் வாசிம் அக்ரம்

‘ஆஷஸ் சும்மா.. இந்தியா, பாக்.. போல் வருமா?’சொல்கிறார் வாசிம் அக்ரம்

20
0
SHARE

புதுடெல்லி, நவ.12&

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் தொடரை காட்டிலும் இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என வாசிம் அக்ரம் கூறி உள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:&

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (.சி.சி.) பயனற்றதாக இருக்கிறது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மீதும் எந்த நடவடிக்கையும் ஐ.சி.சி.யால் எடுக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை.இந்தியா பாகிஸ்தான் நாட்டு ரசிகர்கள் இரு அணிகள் மோதும் போட்டியை எதிர்பார்க்கிறார்கள். மக்களுக்கு உள்ள தொடர்பு அவசியமானது. அரசியலையும், விளையாட்டையும் ஒன்றாக பார்க்கக்கூடாது.இரண்டும் தனித்தனியாக இருக்க வேண்டும். ஆஷஸ் தொடரை விட இந்தியாபாகிஸ்தான் போட்டி விறுவிறுப்பாக இருக்கும். ஆஷஸ் தொடரை லட்சக்கணக்கான மக்கள் பார்ப்பார்கள்.ஆனால் இந்தியா, பாகிஸ்தான் போட்டியை கோடிக்கணக்கான பேர் ரசிப்பார்கள். பாகிஸ்தானுடன் விளையாட இந்தியா தயாராக இல்லாத பட்சத்தில் நாங்கள் அவர்களை கட்டாயப்படுத்த முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.