Home விளையாட்டு மீண்டும் அணியில் இடம் கிடைக்குமா?தினேஷ் கார்த்திக் ஏக்கம்

மீண்டும் அணியில் இடம் கிடைக்குமா?தினேஷ் கார்த்திக் ஏக்கம்

9
0
SHARE

சென்னை, நவ.12&

இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிக்க முடியுமா? என்பது குறித்து தினேஷ் கார்த்திக் மனம் திறந்து உள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த 32 வயதான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன தினேஷ் கார்த்திக் 2004&ம் ஆண்டு தனது 19 வயதில் லார்ட்ஸில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார்.

இந்த போட்டியில் 1 ரன்னோடு ஏமாற்றம் அளித்தார். என்றாலும் இந்தியா இந்த போட்டியில் 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன்பின் 2006&ல் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இடம்பிடித்தார்.

இதன்பின் தொடர்ச்சியாக இந்திய அணியில் இடம்பிடிக்காவிடிலும் அவ்வப்போது இடம்கிடைத்த. 2014&க்குப் பிறகு சுமார் 3 ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்திய அணியில் இடம்கிடைத்தது.

இருப்பினும் அவரால் தொடர்ச்சியாக இந்திய அணியில் நிரந்தர இடம் பிடிக்க முடியவில்லை. உள்ளூர் தொடர்களில் சிறப்பாக விளையாடியதன் காரணமாக தினேஷ் கார்த்திக் மீண்டும் இந்திய அணிக்கு அழைக்கப்பட்டார்.இதுகுறித்து அவர் பேசும்போது, ”அணியில் இருந்து நீக்கப்பட்டப் பிறகு மீண்டும் அணியில் இடம்பிடித்து விளையாடுவது எப்போதுமே கடினமானது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆடும் லெவனில் இடம்பிடித்து விளையாடும்போது, திறமையை வெளிப்படுத்த நெருக்கடியான மனநிலையுடன் போராட வேண்டும்.

நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடினேன். எனக்கான வாய்ப்பு கிடைத்தபோது, ஆடுகளத்தில் நீண்ட நேரம் நின்று ரன்கள் குவித்தேன்’’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here