Home சுடச்சுட மத்திய அரசு ஊழியர்களுக்கு வீடு வாங்க ரூ.25 லட்சம் முன்பணம் வீட்டுவசதி, நகர்புற...

மத்திய அரசு ஊழியர்களுக்கு வீடு வாங்க ரூ.25 லட்சம் முன்பணம் வீட்டுவசதி, நகர்புற அமைச்சகம் தகவல்

8
0
SHARE

புதுடெல்லி, நவ.12&

மத்திய அரசு ஊழியர்களுக்கு, வீடு வாங்க ரூ.25 லட்சம் முன்பணமாக அளிக்கப்படும் என்று மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:&

மத்­திய அரசு ஊழி­யர்­கள் வீடு கட்­டு­­தற்கு எச்.பி.. என்ற திட்­டத்­தில் முன்­­ணம் வழங்­கப்­­டு­கிறது. தற்­போது இத்­திட்­டத்­தின் விதி­மு­றை­களில் திருத்­தம் செய்­யப்­பட்டு உள்­ளது.

இதன்­படி வீடு, பிளாட் ஆகி­­வற்றை வாங்­கவோ அல்­லது வீடு கட்­டவோ வழங்­கப்­படும் முன்­­ணம், ரூ.7.50 லட்­சத்தில் இருந்து, ரூ.25 லட்­சமாக உயர்த்­தப்­பட்டு உள்­ளது. இத்­தொ­கையை 20 ஆண்­டு­களில் சுலப தவ­ணை முறை­யில் திரும்­பச் செலுத்­­லாம்.

முன்­­ணத்­திற்கு 6&9.5 சத­வீ­தம் வரை 4 வித­மாக முன்னர் வட்டி வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது அது 8.5 சத­வீ­தம் தனி வட்டி விகி­­மாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

மத்­திய அரசு ஊழி­யர்­கள் தங்­களின் அடிப்­படை ஊதி­யத்தை பொறுத்து ரூ.25 லட்­சம் வரை முன்­­ணம் பெற­லாம். வங்­கி­யில் பெறும் வீட்­டு­­சதி கடனை விட இத்­திட்­டத்­தில் குறிப்­பி­டத்­தக்க தொகையை மிச்­சப்­­டுத்­­லாம்.

உதா­­­மாக எஸ்.பி.. போன்ற வங்­கி­களில், 8.35 சத­வீத கூட்டு வட்­டி­யில் ரூ. 25லட்­சம் வீட்­டு­­சதி கடன் வாங்கி 20 ஆண்­டு­களில் திரும்­பச் செலுத்­தும் ஒரு­வர் மாத தவ­ணை­யாக ரூ.21 ஆயிரத்து 459 ரூபாய் செலுத்த நேரி­டும்.

அவர், 20 ஆண்­டு­களின் முடி­வில் ரூ.26.50 லட்­சம் வட்­டி­யு­டன், மொத்­தம் ரூ.51.50 லட்­சம் செலுத்தி இருப்­பார். இதே தொகையை எச்.பி.. திட்­டத்­தில் முன்­­­மாக பெற்று, 8.5 சத­வீத தனி வட்டி அடிப்­­டை­யில், 20 ஆண்­டு­களில் திரும்ப செலுத்­தும் போது, முதல், 15 ஆண்­டு­­ளுக்கு மாத தவ­ணை­யாக, ரூ.13 ஆயிரத்து 890 ரூபாய் செலுத்த நேரி­டும்.

எஞ்­சிய காலத்­திற்­கான மாத தவணை ரூ.26 ஆயிரத்து 411  ஆக இருக்­கும். இதன்­படி 20 ஆண்­டு­களில் ஒரு­வர் ரூ.15.84 லட்­சம் வட்டி தொகை உட்­பட மொத்­தம் ரூ.40.84 லட்­சம் மட்­டுமே செலுத்­து­வார்.

அந்த வகை­யில், அவருக்கு ரூ.10.66 லட்­சம் ரூபாயை சேமிக்கலாம். மத்­திய அரசு ஊழி­யர்­­ளுக்கு வீட்டை விரி­வு­­டுத்­தும் திட்­டத்­திற்­கான முன்­­ணம் ரூ.1.80 லட்­சத்தில் இருந்து ரூ.10 லட்­சமாக உயர்த்­தப்­பட்டு உள்­ளது.

மேலும் ஒரு­வர் வாங்­கும் வீட்­டிற்­கான வரம்­புத் தொகை­யும் ரூ.30 லட்­சத்தில் இருந்து ரூ.1 கோடியாக அதி­­ரிக்­கப்­பட்டு உள்­ளது. வங்­கி­கள் அல்­லது நிதி நிறு­­னங்­களில் பெற்ற வீட்­டுவ­சதி கடனை, எச்.பி.. திட்­டத்­திற்கு மாற்­றும் வச­தி­யும் உள்­ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னர் மத்­திய அர­சில் பணி­பு­ரி­யும் தம்­­தி­யில் ஒரு­வர் மட்­டுமே வீடு வாங்க முன்­­ணம் பெற­லாம். தற்போது இரு­­ரும் இணைந்தோ அல்­லது தனி­யா­கவோ முன்­­ணம் பெற வசதி செய்­யப்­பட்டு உள்­ளது குறிப்பிடத்தக்கது.