Home தமிழகம் திருத்தணியில் சுகாதார சீர்கேடு நகராட்சி நிர்வாகம் அலட்சியம்: களத்தில் இறங்கிய இளைஞர்கள்

திருத்தணியில் சுகாதார சீர்கேடு நகராட்சி நிர்வாகம் அலட்சியம்: களத்தில் இறங்கிய இளைஞர்கள்

4
0
SHARE

திருத்தணி, நவ. 12&

திருத்தணி நகராட்சி நிர்வாகம் அலட்சியமாக செயல்படுவதால், இளைஞர்கள் களத்தில் இறங்கி தூய்மை பணிகளில் ஈடுபட்டனர்.

முருகனின் ஐந்தாம் படை வீடாக சிறப்பு பெற்ற திருத்தணி நகரில் 40,000&ம்  மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். தினந்தோறும் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திருத்தணிக்கு வந்து செல்கின்றனர்.  திருத்தணி நகரில் தூய்மைப் பணிகளில் நகராட்சி நிர்வாகம் முறையாக ஈடுபடாத நிலையில் பேருந்து நிலையம் உட்பட முக்கிய பகுதிகளில் குப்பை மற்றும் கழிவுநீர் தேங்கி அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி வருகின்றது. இதனால், காய்ச்சல் உட்பட தொற்று நோய்கள் வேகமாக பரவி குழந்தைகள் முதல் முதியவர் வரை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், ஜோதிநகர் பகுதியில் குப்பைகள் அகற்றப்படாமலும், கழிவுநீர் தேங்கி அங்குள்ள அங்கன்வாடி மையம் அருகே மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பகுதியில் பல நாட்களாக மழை நீரில் கழிவுநீர் தேக்கமடைந்து அதிக அளவில் கொசு உற்பத்தியாகி வருகின்றது. மேலும், வீடுகளுக்கு அருகில் குப்பை தேங்கி, முட்புதர்கள் அடர்த்தியாக வளர்ந்துள்ளதால் அப்பகுதி பொதுமக்களுக்கு காய்ச்சல் உட்பட தொற்று நோய் பரவி வருகின்றது. தூய்மைப் பணிகள் மேற்கொள்ள வலியுறுத்தி நகராட்சி நிர்வாகத்திடம் பகுதிவாசிகள்  புகார் செய்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகின்றது. இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி இளைஞர்கள் ஒன்று சேர்ந்து பொதுமக்களிடமிருந்து சிறிய தொகையை வசூல் செய்து பொக்லென் மூலம் குப்பைகளை அகற்றி, அடர்த்தியாக வளர்ந்துள்ள செடி, கொடிகள் மற்றும் கழிவுநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here