Home தமிழகம் வடகடலோர மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் வானிலை மையம் அறிவிப்பு

வடகடலோர மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் வானிலை மையம் அறிவிப்பு

40
0
SHARE

சென்னை,நவ.12& அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தென்மேற்கு வங்கக்கடலில் நேற்று நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து அதே பகுதியில் நீடிக்கிறது. இதனால் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை பெய்யும். கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் வடகடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்துள்ளது.

அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் அநேக இடங்களிலும், தென் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும். உள் மாவட்டங்களில் லேசான மழை பெய்யும். தமிழகம் மற்றும் புதுவையில் வடகடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை சில நேரங்களில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் வேதாரண்யத்தில் அதிகபட்சமாக 13 செ.மீ பெய்துள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.