Home அரசியல் தாழ்வான பகுதியில் உள்ள நீரை நிரந்தரமாக வெளியேற்ற டிசம்பர் மாதத்திற்கு பிறகு தீர்வு முதல்வர்...

தாழ்வான பகுதியில் உள்ள நீரை நிரந்தரமாக வெளியேற்ற டிசம்பர் மாதத்திற்கு பிறகு தீர்வு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

9
0
SHARE

சென்னை, நவ. 12& தாழ்வான பகுதியில் உள்ள நீரை நிரந்தமாக வெளியேற்ற டிசம்பர் மாதத்திற்கு பிறகு நிரந்த தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்தார்.

சென்னை, தலைமைச் செயலகத்தில், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் நடைபெற்ற வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில்  மேற்கொள்ளப்பட்ட நிவாரணப் பணிகள் மற்றும் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:

கேள்வி: பருவ மழையால் பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் விவசாய நிலங்களை கணக்கெடுக்கும் பணி எப்பொழுது தொடங்கப்படும், அதற்கு வழங்கப்பட வேண்டிய நிவாரணத் தொகை எவ்வளவு?

பதில்: இது பருவமழை ஆரம்பம், இன்னும் டிசம்பர் வரையிலும் நமக்கு காலம் இருக்கின்றது. டிசம்பர் மாதம் வரை மழை முழுவதும் பொழிந்தபிறகு தான் நமக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்துக் கணக்கிடமுடியும். இப்பொழுது எந்தெந்த இடங்களில் பாதிப்பு ஏற்பட்டிருக்கின்றதோ அந்தப் பகுதிகள் சரி செய்யப்பட்டு வருகின்றது.

கேள்வி: இப்பொழுதும் நிறைய இடங்களில் குடியிருப்புப் பகுதிகளை நீர் சூழ்ந்திருக்கிறது. அதற்கு ஆக்கிரமிப்புதான் காரணம் என்கின்றார்கள். அதனை அகற்ற என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது?

பதில்: இது தற்பொழுது ஏற்பட்ட ஆக்கிரமிப்பு அல்ல, உங்களுக்கே நன்றாகத் தெரியும். இவை குடியிருப்புப் பகுதிகளில் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வீடுகள், இப்பொழுது கட்டப்பட்ட வீடுகள் அல்ல. இன்றைக்கு சென்னை மாநகரைப் பொறுத்தவரை, 25 சதுர கிலோமீட்டர் தூரத்திற்கு அனைத்தும் கட்டடங்கள் நிறைந்த பகுதி. அதிக மழை பொழிகின்றபொழுது, சாலைகளின் வழியாகத்தான் மழைநீர் வெளியேற முடியும்.

4 செ.மீ. பொழியும் மழையின் அளவிற்குத்தான் னசயவீயேபந வசதி இருக்கின்றது. எல்லா நகரங்களிலுமே, தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியா மட்டுமல்ல, உலகளவில் எடுத்துக்கொண்டாலும், நகரப் பகுதிகளில் நீர் அன்றாடம் வெளியேறுவதற்குண்டான கால்வாய்தான் அமைத்திருக்கின்றார்கள். கனமழை பொழிகின்றபொழுது, அதிகமான மழைநீர் வருகின்றபொழுது, அனைத்தும் கட்டடங்களாக இருக்கின்ற காரணத்தினால் அந்த மழைநீர் சாலை வழியாகத்தான் செல்கின்றது.

அதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்குகின்றது. அதுதான் காரணம். அப்படியிருந்தாலும், 2015ஆம் ஆண்டில் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தரத் தீர்வு காணவேண்டுமென்பதற்காக, ரூபாய் 4034 கோடி வெள்ளநீர் வடிகால் வசதி செய்வதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, முதற்கட்டமாக ரூபாய் 1101 கோடி நிதிஉதவி செய்து 386 கி.மீ.க்கு வடிகால் வசதி செய்து கொடுப்பதற்காக திட்டம் தீட்டப்பட்டு, 300 கி.மீ. இன்றைக்கு நிறைவடைந்திருக்கின்றது.  எஞ்சிய 86 கி.மீ. பணி துவங்கவிருக்கின்றது.

அதேபோல, கொசஸ்தலை ஆற்று வடிநிலப் பகுதியில் ரூபாய் 1887 கோடி மதிப்பீட்டில் வடிகால் வசதியை நிரந்தரமாக செய்து கொடுப்பதற்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகின்றது. அதேபோல கோவளம் வடிநிலப்பகுதிக்கு ரூபாய் 1234 கோடி மதிப்பீட்டில் முகறு என்ற நிறுவனத்தின் மூலமாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படுகின்றது. ஆகவே, பருவமழை அதிகமாக பொழிகின்ற காலங்களில் தாழ்வான பகுதிகளில் தேங்குகின்ற மழைநீரை வடிகால் வசதியுடன் வெளியேற்றுவதற்காக அந்தப் பணிகள் படிப்படியாக செயலாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

கேள்வி: சென்னையிலுள்ள குடிநீர் தேவையைப் போக்குவதற்காக மறைந்த முதலமைச்சரால் அறிவிக்கப்பட்ட திட்டம் இன்னும் முடிக்கப்படாமல் இருக்கின்றதே?

பதில்: அதில் 1 டி.எம்.சி. தண்ணீர் தேக்கி வைக்கமுடியும். காலதாமதம் ஏற்படுவதற்குக் காரணம், நாம் அணை கட்டுகின்ற பகுதிகளில் உள்ள நில உரிமையாளர்கள் நிலத்தை அரசிடம் ஒப்படைக்க மறுக்கின்றார்கள். அதற்கான பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானப்படுத்தி, அவர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அந்தப் பணி விரைவாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இன்னும் 4, 5 மாதங்களில் பணி நிறைவடைந்துவிடும்.

கேள்வி: கடந்த முறையின்பொழுது மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளிலேயே, இந்த முறையும் தேங்கியுள்ளது. அதற்கான காரணங்கள் இந்த ஆய்வுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதா? நிரந்தரத் தீர்வு காண ஏதேனும் முக்கிய முடிவுகள் இந்த ஆய்வுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டதா?

பதில்: நிரந்தரத் தீர்வு காண்பதற்காகத்தான், நான் விளக்கமாக கூறியிருக்கின்றேன். மறைந்த முதல்வர் வெள்ளநீர் வடிகால் வசதி செய்வதற்காக ரூபாய் 4034 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு முதற்கட்ட பணி தொடங்கப்பட்டு, இன்னும் இரண்டு கட்டப்பணிகள் துவங்கவிருக்கின்றது. அதுமட்டுமல்ல, தாழ்வான பகுதிகளில்

20, 30 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட வீடுகள், அதற்கு வழிகண்டு அவற்றை அகற்றிக் கொண்டிருக்கின்றோம். இன்றைக்கு அமைச்சர்கள் , அரசால் நியமிக்கப்பட்ட கண்காணிப்பு அதிகாரிகளும் அங்கேயே முகாமிட்டு, இரவு பகல் பாராமல், சென்னை மாநகராட்சி அதிகாரிகளோடு இணைந்து, தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள நீரை மின்மோட்டார் வைத்து உடனடியாக வெளியேற்றியதன் காரணத்தினால் இன்றையதினம் சென்னை மாநகரத்தில் எங்கேயும் நீர் இல்லாத அளவிற்கு அரசு  டுத்த நடவடிக்கையைக் காணமுடிகின்றது.

அரசைப் பொறுத்தவரை, துரித நடவடிக்கைகளை எடுத்துதான் வருகின்றது. வீடுகளை இடிக்காமல், இருக்கின்ற வழிகளை வைத்து, மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தண்ணீர் அகற்றப்பட வேண்டும் என்கின்ற சூழ்நிலையில் சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் அரசு தக்க நடவடிக்கை எடுத்ததின் காரணமாக, சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் இருக்கின்ற 15 மண்டலங்களிலும், தாழ்வான பகுதியில் இருக்கின்ற மழைநீர் வெளியேற்றப்பட்டிருக்கின்றது.

காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் ஏரிகள் நிறைந்துள்ள பகுதி. அந்த ஏரிகள் நிறைந்த பகுதிகளில், தாழ்வான பகுதிகளில் வீடுகள் கட்டியுள்ள காரணத்தினால் மழைநீர் வெளியேறாமல் இருக்கின்றது. அப்படிப்பட்ட அந்தப் பகுதிகளிலும் தேங்கியுள்ள நீரை நிரந்தரமாக வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்வதற்கு நியமிக்கப்பட்ட கண்காணிப்பு அதிகாரிகளிடம் தகவல்கள் கேட்டிருக்கின்றோம். அவர்களும் அப்பணிகளை மேற்கொள்வார்கள். இந்தப் பருவமழை டிசம்பர் மாதம் வரை பொழியும், அதன்பிறகு நிரந்தரத் தீர்வு காண்பதற்கு அரசால் அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும். இவ்வாறு தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here