Home சம்பவம் படப்பை அருகே மிடாஸ் மது ஆலையில் 3&வது நாளாக ரெய்டு

படப்பை அருகே மிடாஸ் மது ஆலையில் 3&வது நாளாக ரெய்டு

11
0
SHARE

படப்பை, நவ.12& படப்பை அருகே உள்ள மிடாஸ் மதுபான தொழிற்சாலை இயங்கி வருகிறது. கடந்த வியாழக்கிழமை காலை 6 மணி அளவில் 3 தனியார் வாடகை காரில் பெண் அதிகாரிகள் உள்பட 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் மிடாஸ் கோல்டன் டிஸ்டலரீஸ் மதுபான ஆலைக்கு சென்று அங்கு உள்ள அலுவலகங்களில் தீவிரமாக சோதனை செய்து வந்தனர்.

வியாழக்கிழமை  இரவு 11 மணி அதிகாரிகள் சோதனையில் ஈடுப்பட்டனர். பின்னர் தற்காலிகமாக சோதனையை நிறுத்திய அதிகாரிகள், மீண்டும் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு 2வது நாள் சோதனையை தொடங்கினார்கள். இதன் இதன் தொடர்ச்சியாக மிடாஸ் மதுபான ஆலைக்கு அட்டைப்பெட்டிகள் சப்ளை செய்யும் ஸ்ரீசாய் எண்டர்பிரைசஸ் நிறுவத்திலும் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனை நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நள்ளிரவு 3 வரை தொடர்ந்தது. இந்த சோதனை 3வது நாளாக நேற்று காலை 11 மணி அளவில் மீண்டும் மிடாஸ் மதுபான ஆலை மற்றும் ஸ்ரீசாய் எண்டர்பிரைசஸ் ஆகிய இடங்களில் அதிகாரிகள் சோதனையில் ஈடுப்பட்டனர். மேலும் மதுபான ஆலை மேலாளரிடம் விசாரித்து வருகின்றனர்.

இந்த சோதனை முடிவுக்கு பிறகே என்ன ஆவணங்கள் சிக்கியுள்ளது என்பது பற்றிய தகவல் தெரியவரும். 3வது நாளாக சோதனை நடைபெற்றதால் ஆலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வருகின்ற ஞாயிற்றுக்கிழமை வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. என்பது குறிப்பிடதக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here