Home தமிழகம் இணையதளத்தில் மேல்நிலை துணைத்தேர்வு விடைத்தால் நகல் அரசுத் தேர்வுகள் இயக்குநர் அறிவிப்பு

இணையதளத்தில் மேல்நிலை துணைத்தேர்வு விடைத்தால் நகல் அரசுத் தேர்வுகள் இயக்குநர் அறிவிப்பு

10
0
SHARE

சென்னை, நவ. 12& மேல்நிலைத் துணைத் தேர்வு செப்டம்பர் மற்றும் அக்டோபர் 2017 விடைத்தாட்களின் நகலினை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளவும், மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தல் குறித்தும் அரசுத் தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

அதில், செப்டம்பர் மற்றும் அக்டோபர் 2017, மேல்நிலைத் துணைத் தேர்வெழுதி விடைத்தாட்களின் நகல் கோரி விண்ணப்பித்தவர்கள் நாளை (13ம் தேதி) பிற்பகல் முதல் scan.tnd-ge.in  என்ற இணையதளத்திற்குச் சென்று தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினைப் பதிவு செய்து தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாட்களின் நகலினைப் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

விடைத்தாள்களின் நகலினை பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல் 2 அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால், இதே இணையதள முகவரியில் என்ற தலைப்பினை கிளிக் செய்து வெற்று விண்ணப்பத்தினைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இவ்விண்ணப்பப் படிவத்தினை,

பூர்த்திசெய்துஇருநகல்கள்எடுத்து 15ம் தேதி (புதன்கிழமை) காலை 10 மணி முதல் 17ம் தேதி (வெள்ளிக் கிழமை) மாலை 5 மணிக்குள் உரிய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.  மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கான கட்டணத்தினை முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் பணமாகச் செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here