Home சிறப்புச் செய்திகள் ‘மிடாஸ்’ ஆலை, ‘ஸ்பைசஸ் பார்க்’க்கு மூடு விழா…

‘மிடாஸ்’ ஆலை, ‘ஸ்பைசஸ் பார்க்’க்கு மூடு விழா…

7
0
SHARE

தமிழகம் முழுவதும் டி.டி.வி தினகரன் ஆதரவாளர்கள், உறவினர்கள், நண்பர்கள் வீட்டில் மூன்றாவது நாளாக வருமான வரித்துறை ரெய்டு தொடருகிறது. ஆனால் சசிகலாவின் கணவர் எம்.நடராசனின் சகோதரர்கள் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு நடக்கவில்லை. சரி பெரிய இடத்து விவகாரம், என்றபடி அடுத்த செய்திக்கு சென்றார் தாத்தா. இளைஞர்கள் பொறுமையிழந்து தாத்தா, ரெய்டின் பின்னணி என்ன தாத்தா என்று ஆர்வமுடன் கேட்டார்கள்.. தாத்தா சிரித்துக் கொண்டே நாளை ரெய்டுப்பற்றி பேசுவோம்.

  சசிகலாவின் மிடாஸ் மதுபான உற்பத்தி ஆலையை எங்களிடம் விற்றுவிடுங்கள் என்று பா..க நிர்வாகி ஒருவர் தொடர்ந்து பேரம் பேசி வந்தார். ஆனால் டி.டி.வி தினகரன் தரப்பு விற்க மறுத்துவிட்டார்கள். இந் நிலையில்  வருமான வரி சோதனையை தொடர்ந்து, சசிகலா குடும்பத்தினருக்கு சொந்தமான, ‘மிடாஸ்நிறுவனத்திடம் இருந்து, மதுபானம் கொள்முதல் செய்வதை முழுவதுமாக நிறுத்த, ‘டாஸ்மாக்முடிவு செய்துள்ளது

தமிழக அரசின், டாஸ்மாக் நிறுவனம், பீர் மற்றும் மது வகைகள் சில்லரை விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. சசிகலா குடும்பத்தினருக்கு சொந்தமான, மிடாசிடம் இருந்து மட்டும், 12 லட்சம் பெட்டிகள் வாங்கப்படுகின்றன. தி.மு.., ஆதரவு நிறுவனங்களான, ‘எஸ்.என்.ஜே., கல்ஸ்ஆகியவற்றிடம், ஆறு லட்சம் பெட்டி; மற்ற நிறுவனங்களிடம் இருந்து, மூன்று  நான்கு லட்சம் பெட்டிகளும் வாங்கப் படுகின்றன. முதல்வர் பழனிசாமி,தினகரன் மோதலை தொடர்ந்து, மிடாசிடம் வாங்கும் மதுபானங்களை, எட்டு லட்சம் பெட்டி, ஏழு லட்சம் பெட்டி என, டாஸ்மாக் படிப்படியாக குறைத்தது.அதன்படி, இம் மாதத்திற்கு, ஐந்து லட்சம் பெட்டிகள் சப்ளைக்கான, ‘ஆர்டர்மட்டுமே தரப்பட்டுள்ளது.

   முதல்வராக ஜெயலலிதா இருந்த போது, டாஸ்மாக்கில், மிடாஸ் ஆதிக்கம் அதிகம் இருந்தது. மிடாஸ் மது வகைகளை, ‘குடிமகன்கள் விரும்பாத நிலையிலும், அதிகளவில் வாங்கப்பட்டு, வலுக் கட்டாயமாக விற்கப்பட்டது. முதல்வர் பழனிசாமி, தினகரன் மோதல், டாஸ்மாக்கில் மிடாசின் ஆதிக்கத்தை குறைத்தது.  சில மூத்த அமைச்சர்கள், மிடாசுக்கு ஆதரவாக இருந்ததால், மது கொள்முதலை நிறுத்த முடியவில்லை

வருமானவரித்துறைஅதிகாரிகள், மிடாஸ் ஆலை உட்பட, சசிகலா, தினகரன் ஆகியோரின் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடு,அலுவலகங்களில், சோதனை நடத்தினர். அதனால், அடுத்த மாதத்தில் இருந்து, மிடாசில் இருந்து, மது வகைகள் வாங்குவதை முழுவதுமாக நிறுத்த, முடிவு செய்யப்பட்டுள்ளது. இனி மிடாஸ் ஆலையில் கொள்முதல் கிடையாது. அதற்கு பதிலாக  தி.மு.க ஆதரவாளர்கள் நடத்தும் ஆலைகளில் கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் தாத்தா. இளைஞர்கள் இப்ப புரிகிறதா.

   முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தால் திறந்துவைக்கப்பட்ட  சிவகங்கைஸ்பைசஸ் பார்க்கிற்குஅங்கீகாரம் தர தமிழக அரசு தொடர்ந்து மறுத்துவருகிறது. இதனால் அங்கு தொழில் துவங்கிய 30 ஏற்றுமதி நிறுவனத்தினரும் அதிருப்தி அடைந்துள்ளனர். மத்திய தொழில் வர்த்தக அமைச்சகம் சார்பில் மாநிலத்திற்கு ஒருஸ்பைசஸ் பார்க்துவங்கப்பட்டது.

தமிழகத்தில் மிளகாய், மஞ்சள் போன்ற வாசனை பொருட்களுக்கானஸ்பைசஸ் பார்க்அமைக்க 2008 ல் சிவகங்கையில் அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்காக 73 ஏக்கர் நிலத்தைஸ்பைசஸ்வாரியத்திடம் மாநில அரசு வழங்கியது. 23 ஏக்கரில் 28 கோடி ரூபாயில் பல ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட 2 சேமிப்பு கிட்டங்கிகள், தட்பவெப்ப நிலை கட்டுப்பாட்டு அறை, சுத்தம் செய்து தரம் பிரிக்கும் இயந்திரங்கள் போன்றவை அமைக்கப்பட்டன.

மேலும் நிறுவனங்கள் கோடவுன் அமைக்க 50 ஏக்கர் தனியாக ஒதுக்கப்பட்டது. இந்த பூங்காவை 2013 ல் அப்போதைய மத்திய அமைச்சர் சிதம்பரம் திறந்து வைத்தார். இந்த பூங்கா மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 2,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால்ஸ்பைசஸ் பார்க்கிற்குமாநில நகரமைப்பு இயக்குனரகம் அங்கீகாரம் இல்லாததால், நிறுவனங்கள் கோடவுன்கள் அமைக்க தடை விதிக்கப்பட்டது

இதையடுத்துஸ்பைசஸ்போர்டு சார்பில் அங்கீகாரம் கேட்டு 2016 ஜனவரியில் மாநில நகரமைப்பு இயக்குனரகத்திற்கு கோப்பு அனுப்பப்பட்டது. இருப்பினும் அங்கீகாரம் தர மறுக்கப்பட்டு வந்தது. கடந்த 2016 ஆகஸ்டில் 6 பேர் அடங்கிய அ.தி.மு.., எம்.பி.,க்கள் குழுபார்க்கைபார்வையிட்டு, விரைவில் அங்கீகாரம் பெற்று தருவதாக உறுதியளித்தது. அதன்பின் இரண்டு முறை கோப்புகள் அனுப்பியும், மாநில அரசு அங்கீகாரம் தரவில்லை.

இதனால் பல லட்சம் ரூபாய் செலவழித்து அங்கு பிளாட் வாங்கி தொழில் துவங்கிய 30 ஏற்றுமதி நிறுவனத்தினரும் அதிருப்தி அடைந்துள்ளனர். அவர்கள்பிளாட்களைதிருப்பி ஒப்படைக்க தயாராகி வருகின்றனர். இதனால் ரூ28 கோடி கட்டடங்கள், இயந்திரங்கள் வீணாகும்நிலை ஏற்பட்டுள்ளது, தமிழ்நாட்டில் என்னமோ நடக்குது.ஒண்ணுமே புரியவில்லை.. என்று முணு முணுத்தவாறு ரெய்டு நடக்கும் இடங்களை பார்வையிட புறப்பட்டார் தாத்தா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here