Home சம்பவம் போலி வட்டார போக்குவரத்து அலுவலர் கைது அலுவலரிடமிருந்து ரூ.2,800 பறிமுதல்

போலி வட்டார போக்குவரத்து அலுவலர் கைது அலுவலரிடமிருந்து ரூ.2,800 பறிமுதல்

31
0
SHARE

காஞ்சிபுரம், ஆக. 21&  காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடி அருகே சென்னை&பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வட்டார போக்குவரத்து அலுவலர் எனக் கூறிக்கொண்டு பணம் வசூல் செய்த ஒரு நபரை போலீசார் கைது செய்தனர்

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடி அருகே சென்னை&பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வட்டார போக்குவரத்து அலுவலர் எனக் கூறிக்கொண்டு ஒரு நபர், அவ்வழியாக வந்த நான்கு சக்கர வாகன ஓட்டிகளிடம் ஆவணங்களை சரிபார்பதாகக் கூறிக்கொண்டு வாகன ஓட்டிகளிடமிருந்து பணவசூலில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

அப்போது அவ்வழியாக  சென்ற வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரியும் நிர்மல் ராஜ் என்பவர், பணம் வசூல் செய்பவர்மீது சந்தேகம் ஏற்பட்டு ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் அங்கு வந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து  வாகன ஓட்டிகளிடம் பண வசூலில் ஈடுபட்டிருந்தவரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். பின்னர், அவரிடமிருந்து ரூ. 2,800&ஐபறிமுதல்செய்துவிசாரணை