Home சம்பவம் வேப்பூர் அருகே சாலை மறியல் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

வேப்பூர் அருகே சாலை மறியல் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

14
0
SHARE

வேப்பூர், நவ. 11& வேப்பூர் அருகே பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் இரண்டு மணி நேரம் போக்குவரத்து  பாதிக்கபட்டது.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகிலுள்ள. கண்டபங்குறிச்சியில்   விருத்தாசலம் சேலம் சாலையில் மினி டேங்க் ஒன்று இயங்கி வந்தது  இந்த டேங்கிலிருந்து வரும் கழிவு நீரை அப்பகுதி வாழ் மக்கள் வாய்க்காலில் விடாமல் தேசிய நெடுஞ்சாலையில்  தேங்கவிட்டிருந்தனர் இதனால் கிராமத்தின் மற்றொரு பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து கடந்த வாரம் சாலைமறியல் செய்தனர்

இது குறித்து  நல்லூர் வட்டார அலுவலரின் உத்திரவின் பேரில் மின்சார ஒயரை துண்டித்துவிட்டனர் தனால் அப்பகுதி மக்கல் மீணடும் மின்சார இணைப்பு கொடுக்க வேண்டி சாலை மறியல்  செய்தனர்   சுமார் இரண்டு மணி  நேரம் விருத்தாசலம் சேலம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது  அதனால் பொதுமக்கள் பயணிகள் பெரிதும் அவதியடைந்தனர்.

சாலை மறியல்  குறித்து தகவலறிந்த வேப்பூர் தாசில்தார் ரத்தினாவதி,  வருவாய் ஆய்வாளர் மஞ்சுளா கிராம நிர்வாக அலுவலர் ரவிக்குமார், மற்றும்  வேப்பூர் காவல்துறையினர் வந்து பொதுமக்களிடம் சமாதானம் பேசி மீண்டும் மின்சார இணைப்பு  கொடுக்கபடும் என்று உறுதி அளித்ததால் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here