Home சம்பவம் பழுதான கப்பல் உடைப்பால் விஷவாயு கசியும் அபாயம் மீனவ சங்கம் எச்சரிக்கை

பழுதான கப்பல் உடைப்பால் விஷவாயு கசியும் அபாயம் மீனவ சங்கம் எச்சரிக்கை

55
0
SHARE

சென்னை, நவ. 11& சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் ராயபுரம், ஆர்.கே. நகர், திருவொற்றியூர் ஆகிய பகுதிகளுக்கு உட்பட்ட 50க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவ மக்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்பிடித்து வருகின்றனர்.

பைபர் படகுகளிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இதனால், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் வார்ப்பு பகுதியில் படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.  இந்த நிலையில் வார்ப்பு பகுதியில் பழுதடைந்த மீன்பிடி கப்பல்கள் நிறுத்தப்பட்டு, உடைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதுதொடர்பாகபாரதியமீனவகூட்டவைதலைவர்வி.பிராபாகரன் , செய்தியாளர்களிடம் கூறும்போது. சென்னை, காசிமேடு மீன் பிடி துறைமுகத்தில், கடற்கரை மண்டல ஒழுங்கு முறை அறிவிப்பாணையின் விதிகளை மீறி, சுற்று சூழலுக்கு கேடு விளைவிக்கும் வகையில், ரைசிங் சண் என்ற மீன் பிடி கப்பல் உடைக்கபட்டு வருகிறது. மேலும், ரைசிங் ஸ்டார், ஓசன் மைட்டி ஆகிய இரண்டு கப்பல்களும் உடைக்கப்பட உள்ளது. கப்பல்கள் உடைக்கப்பட்ட அனுமதிக்கப்பட்ட இடத்தில் தான் ,அந்த பணியை செய்ய வேண்டும். மேலும், கப்பலை உடைக்கும் முன்பு, அதில் நச்சு கழிவுகளான பாதரசம், ஆஸ்பிடாஸ் ஆகியவற்றை அகற்ற , அதன் உரிமையாளர் முன் வர வேண்டும். இந்த கப்பல் உடைக்கும் முன்பு, சுற்று சூழல் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கண்காணித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காலாவதியான மீன் பிடி கப்பலை உடைக்கபடுவதை உடனடியாக மீன் வளத்துறை தடுத்து நிறுத்த, மாநில அரசை வலியுறுத்திகிறேன் . வார்ப்பு பகுதிக்கு, அந்த கப்பல்கள் கொண்டு வரும்போதே, மீன் வளத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும். ஆனால், மீனவர்களின், வாழ்வாதாரத்தில் விளையாடுவதே, மீன் வளத்துறைக்கு  வாடிக்கையாக கொண்டு இருப்பதை பாரதிய மீனவ கூட்டவை வன்மையாக கண்டிக்கிறது என்றார்.