Home அரசியல் கொள்ளை, கமிஷன் ஈ.பி.எஸ், ஒ.பி.எஸ். மீது ஸ்டாலின் கடும் தாக்கு

கொள்ளை, கமிஷன் ஈ.பி.எஸ், ஒ.பி.எஸ். மீது ஸ்டாலின் கடும் தாக்கு

9
0
SHARE

சென்னை, நவ. 11& சென்னையில் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், திருநெல்வேலியில் வருகிற 13ம் தேதி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா அரசின் சார்பில் கொண்டாடப்பட இருக்கிறது. வள்ளியூர் மோட்டார் வாகன ஆய்வாளரே, போக்குவரத்து துறை சார்பாக அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் ராதாபுரம் நாங்குனேரி தாலுகாக்களுக்கு சர்குலரே அனுப்பி இருக்கிறார்கள்.

13ம் தேதி நடக்கும் எம்.ஜி. ஆர் நூற்றாண்டு விழாவிற்கு உங்களுடைய வாகனங்களை 1ம் தேதியே முழு தகுதியோடு ஓட்டுநர் மற்றும் உரிமையாளரோடு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என ஒரு உத்தரவு போட்டிருக்கிறார்கள். அரசு உதவி பெறும் மற்றும் மெட்ரிக் உயர்நிலைப் பள்ளிகளுக்கு மழையை காரணம் சொல்லி விடுமுறை என அறிவித்து இருக்கிறார்கள்.ஆனால் அங்கு மழையே பெய்யவில்லை. அதாவது எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுவது அரசின் பணம். எம்.ஜி.ஆரின் பெருமையை பாடட்டும், பேசட்டும் நாங்கள் வேண்டாம் என சொல்லவில்லை. ஆனால், அதை அரசியலாக்கி, ஏற்கனவே மாணவர்களை கட்டாயப்படுத்தி இந்த விழாவிற்கு அழைத்து வரக்கூடாது என நீதிமன்றமே ஒரு உத்தரவு போட்டிருக்கிறது. ஆனால் அதையும் மீறி இந்த ஆட்சியில் இப்படி நடந்து கொண்டிருக்கிறதுஎங்கு பார்த்தாலும் மழையால் பயிர்கள் சேதமடைந்து மக்கள் பல தொல்லைகளுக்கு ஆளாகி இருக்கிறார்கள்.  

அதைப்பற்றியெல்லாம்இந்தஆட்சிகவலைப்படவில்லை. இன்றைக்கு மக்களின் வரிப்பணத்தை செலவு செய்து விழாக்கள் நடத்தி அதில் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் செயல்படுவோம் என்கிறார்கள். இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக தான் செயல்படுகிறார்கள் எப்படி என்றால் கொள்ளை அடிப்பதிலும், கமிஷன் பெறுவதிலும் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here