Home அரசியல் ரூ.17 கோடியில் வேளாண் கட்டடங்கள் முதல்வர் திறந்து வைத்தார்

ரூ.17 கோடியில் வேளாண் கட்டடங்கள் முதல்வர் திறந்து வைத்தார்

9
0
SHARE

 சென்னை, நவ. 11& ரூ.17 கோடி மதிப்பிலான வேளாண்மைத் துறை கட்டடங்களை முதல்வர் திறந்து வைத்தார்.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேளாண்மைத் துறை சார்பில் திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றத்தில் 1 கோடியே 87 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட மதில்சுவருடன் கூடிய சேமிப்புக் கிடங்கினை காணொலிக் காட்சி  மூலமாகத் திறந்து வைத்தார்.

மேலும், ரூ 15 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 6 ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையக் கட்டடங்கள், 2 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், சேமிப்புக் கிடங்கு, மஞ்சள் பதப்படுத்தும் மையம், பரிவர்த்தனை கூடம், மாவட்ட தோட்டக்கலை தொழில்நுட்ப ஆதார மையம் ஆகியவற்றை திறந்து வைத்தார். மேலும், நாகப்பட்டினம் மாவட்டம் செம்பனார்கோயில், பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர், திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் மற்றும் துரிஞ்சாபுரம், விழுப்புரம் மாவட்டம்  வானூர் மற்றும் மரக்காணம் ஆகிய இடங்களில் 9 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 6 ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையக் கட்டடங்கள்.

நபார்டுவங்கியின்கிடங்கு உட்கட்டமைப்பு நிதியின் கீழ் ஈரோடு மாவட்டம்  மயிலம்பாடியில் 1 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட அலுவலகக் கட்டடத்துடன் கூடிய சேமிப்பு கிடங்கு, விழுப்புரம் மாவட்டம் மணலூர்பேட்டையில் 1 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடம்; திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடம்  திருவண்ணாமலை மாவட்டம்  அம்மாபாளையத்தில் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மஞ்சள் பதப்படுத்தும் மையம்.

ஈரோடு மாவட்டம்  வில்லரசம்பட்டியில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அலுவலகக் கட்டடத்துடன் கூடிய பரிவர்த்தனைக்கூடம் திருவண்ணாமலை மாவட்டம்  திருவண்ணாமலையில் 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாவட்ட தோட்டக்கலை தொழில்நுட்ப ஆதார மையம் என மொத்தம் ரூ 17 கோடியே 77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வேளாண்மைத் துறை கட்டடங்களை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி திறந்து வைத்தார்.

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் புறநகர் வீட்டு காய்கறி உற்பத்தி பெருக்கு திட்டத்தின் கீழ், கத்தரி, தக்காளி, புடலங்காய், பாகற்காய், பீர்க்கன்காய், மிளகாய், கொத்தவரங்காய், மற்றும் கீரைவகைகள் ஆகிய காய்கறிகளில் ஏதேனும் 5 காய்கறி விதைகள் அடங்கிய 6,25,000 பாக்கெட்டுகளை வழங்கும் திட்டத்தினை துவக்கி வைக்கும் அடையாளமாக,  முதல்வர் 5 பயனாளிகளுக்கு காய்கறி விதைகள் அடங்கிய பாக்கெட்டுகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், வேளாண்மைத் துறை அமைச்சர் ரா. துரைக்கண்ணு,  ஊரகத் தொழில்துறை அமைச்சர் பி. பெஞ்சமின், தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத்துறை அமைச்சர் க.பாண்டியராஜன், தலைமைச் செயலாளர்  கிரிஜா வைத்தியநாதன், வேளாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை ஆணையர் சிரு, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் அர்ச்சனா பட்நாயக், வேளாண்மைத் துறை இயக்குநர் தட்சிணாமூர்த்தி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு தெரிவிக்கபட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here