Home தமிழகம் 2,662 மாணவ, மாணவிகளுக்கு ரூ.4.25 கோடி மதிப்பிலான விலையில்லா மடிக்கணினி அமைச்சர் வழங்கினார்

2,662 மாணவ, மாணவிகளுக்கு ரூ.4.25 கோடி மதிப்பிலான விலையில்லா மடிக்கணினி அமைச்சர் வழங்கினார்

4
0
SHARE

சென்னை, நவ. 11& மதுரை மாநகராட்சி இராஜா முத்தையா மன்றத்தில் நடைபெற்ற விழாவில் மதுரை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் 2,662 மாணவ, மாணவிகளுக்கு ரூ.4.25 கோடி மதிப்பிலான விலையில்லா மடிக்கணினிகளை மாநகராட்சி ஆணையாளர் அனீஷ் சேகர் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவ ராவ் முன்னிலையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார்.

இது குறித்து அமைச்சர் பேசுகையில், தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில்   32.67 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கியுள்ளது. மதுரை மாநகராட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் 12,448 மாணவ, மாணவிகளுக்கு ரூ.19.91 கோடி மதிப்பிலான மடிக்கணினிகளும், 2016&17ம் கல்விஆண்டில் 2,662 மாணவ, மாணவிகளுக்கு ரூ.4,25,92,000 மதிப்பிலான மடிக்கணினிகள் வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசானது பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இது போன்ற எண்ணற்ற திட்டங்களை வழங்கி வருகிறது. மதுரை மாநகராட்சி பள்ளியை பொருத்தமட்டில் அனைத்து வசதிகளிலும் சிறப்பாக வழங்கப்பட்டு வருகிறது. மாணவ செல்வங்களுக்கு அவர்கள் படிப்பதற்கு வசதியாக தளவாட சாமான்கள் ரூ.69.57 லட்சம் செலவில் டான்சி நிறுவனம் மூலம் வாங்கி வழங்கப்பட்டுள்ளது. பள்ளிகளை சீரமைப்பதற்காக ரூ.5.65  கோடி  மதிப்பில் மராமத்து மற்றும் கூடுதல் கட்டிடம் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவராவ், மாநகராட்சி ஆணையர் அனீஷ் சேகார், மதுரை பாராளுமன்ற உறுப்பினர்  கோபாலகிருஷ்ணன்,சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ்.சரவணன், மாணிக்கம், உதவி  ஆணையாளர் பழனிச்சாமி, மாநகராட்சி கல்வி அலுவலர் செல்வராஜ், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல், மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.