Home சிறப்புச் செய்திகள் அரசுக்கு எதிராக கால்நடை டாக்டர்கள்

அரசுக்கு எதிராக கால்நடை டாக்டர்கள்

36
0
SHARE

இளைஞர்கள், தாத்தாவுடன் இணைந்து வருமான வரித்துறை ரெய்டு நடந்த இடங்களுக்கு சென்று வந்தார்கள்.. இந்த ரெய்டு முன் கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்டது என்பது உறுதியாக தெரிகிறது..வருமான வரி கடந்த இரண்டு ஆண்டுகளில் நடத்திய ரெய்டுகளில், தற்போதைய நிலையே தெரியவில்லை. வருமான வரி ரெய்டில் சிக்கி முன்னாள் தலைமைச் செயலாளர் அமைதியாக ஒய்வு பெற்றுவிட்டார். அதனால் வருமான வரித்துறை மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை.

இரு சக்கர வாகனத்தில் தாத்தாவுடன் இளைஞர்கள் திரும்பும் போது, வழி மறித்த சிலர் தாத்தா..கொரட்டூரில் காவல்துறை அதிகாரிகள் ஒத்துழைப்புடன் சாரி மாமூல் வாங்கிக் கொண்டு போதை பொருள் மாவோ விற்பனை பெரிய அளவில் நடக்கிறது.

மேலும் பாடியில் உள்ள மன மகிழ் மன்றத்தில் சூதாட்டம், விபச்சாரம், போதை பொருட்கள் விற்பனை என்று ஜோராக நடக்கிறது.. இந்த சட்டத்துக்கு புறம்பான நடவடிக்கைகளுக்கு, காவல்துறையின் ஆதரவு இருக்கிறது. இதனால் மக்கள் காவல் நிலையத்தில் புகார் செய்யவே பயப்படுகிறார்கள்.. அதானால் உங்களிடம்சொன்னோம் தாத்தா..நாளிதழில் வெளியிட்டு முகத்திரை கிழியுங்கள் தாத்தா என்று ஆவேசமாக கூறினர். தாத்தா அவர்களுக்கு தைரியம் சொல்லி அனுப்பி வைத்தார்.

     கடந்த சில மாதங்களாகவே நிலக்கரி தட்டுப்பாட்டின் காரணமாக அனல் மின் நிலையங்களுக்கு மூடு விழா நடத்தி வருகிறார்கள். தற்போது நிலக்கரி தட்டுப்பாடு அதிகமாகிவிட்டது. மின்சார வாரியத்திற்கு, 4,320 மெகாவாட் திறனில், ஐந்து அனல் மின் நிலையங்கள் உள்ளன.

இவற்றில், மின் உற்பத்திக்கு பயன்படுத்தும் நிலக்கரி, ஒடிசா, மேற்கு வங்கம், தெலுங்கானா மாநிலங்களில் உள்ள, மத்திய அரசின், கோல் இந்தியா நிறுவன சுரங்கங்களில் இருந்து பெறப்படுகிறது. ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் பெய்த கன மழையால், தமிழகத்திற்கு நிலக்கரி வருவது குறைந்தது.

இதனால், அனல் மின் நிலையங்களில், மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.  அக்.,27ம் தேதியிலிருந்து இருந்து, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உட்பட கடலோர மாவட்டங்களில், கன மழை பெய்ததால், தமிழக மின் தேவை, 11 ஆயிரம் மெகாவாட்டிற்கு கீழ் சரிந்தது.  இந்த வாய்ப்பை பயன்படுத்தி, நிலக்கரியை மிச்சப்படுத்தும் வகையில், மின் வாரியம், அனல் மின் நிலையங்களில், மின் உற்பத்தியை அதிகம் குறைத்தது.

    அனல் மின் நிலையங்களில், தினசரி, 3,500 மெகாவாட்டுக்கு மேல் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். நிலக்கரி பிரச்னையால், 2,000 மெகாவாட்டிற்கும் குறைவாகவே உற்பத்தி நடந்தது. பருவ மழை துவங்கியதால், மின் உற்பத்தி, 1,700 மெகாவாட்டிற்கு கீழ் குறைக்கப்பட்டது. பல நாட்களுக்கு, மழை நீடிக்கும் என, எதிர்பார்க்கப் பட்டது. ஆனால், ஒரு வாரம் மட்டுமே மழை பெய்த நிலையில், தற்போது, வெயில் அடிக்கிறது

இதனால், மின் தேவை, 12 ஆயிரம் மெகா வாட்டை தாண்டி உள்ளது. கோல் இந்தியா நிறுவனத்திலிருந்து 2.50 இலட்சம் டன் நிலக்கரி வந்தால் தான் நிலக்கரி தட்டுப்பாடு இல்லாமல் மின் உற்பத்தி செய்ய முடியும் என்று மின்சாரவாரியத்தின் உயர் அதிகாரி தாத்தாவிடம் செல்போனில் கூறியதை, தாத்தா ஸ்பீக்கர் போன் மூலம் இளைஞர்கள் கேட்டார்கள்.. என்ன தாத்தா, இனி மின்சாரம் தட்டுப்பாடுதானா, தாத்தா,ஆமாம் என்று தலையை மட்டும் அசைத்தார்.

தமிழக அரசின் நிர்வாகம் முடங்கி போனதற்கு சின்ன உதாரணம் என்ற தாத்தா.உதவி இயக்குனராக பதவி உயர்வு பெற்ற 58 பேர், அரசாணை நிறுத்திவைக்கப்பட்டதால் மீண்டும் கால்நடை மருந்தகங்களில் உதவி மருத்துவர்களாக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.கால்நடைத்துறையில் மாநில அளவில் 5 கூடுதல் இயக்குனர், 33 மண்டல இயக்குனர், 44 துணை இயக்குனர், 311 உதவி இயக்குனர், 4 நிலை அலுவலர்கள், 2800 கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்கள் உள்ளன.

பிப்ரவரியில் 8, 16, 24 ஆண்டு பணி முடித்த கால்நடை உதவி மருத்துவர் மற்றும் அலுவலர்களுக்குடி..சி.பி.,’ என்ற திட்டத்தின் கீழ் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு அளிக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.இதன்படி 311 பேர் உதவி இயக்குனர்களாக பதவி உயர்வு பெற்று உதவி இயக்குனர் அலுவலகம் மற்றும் முதன்மை கால்நடை மருத்துவமனையில் நியமிக்கப்பட்டனர்.இந்த அரசாணையை பின்பற்றி பொதுப்பணித்துறை உட்பட பல்வேறு துறைகளில் உள்ளவர்களும் சம்பள உயர்வு அளிக்க அரசிடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து அரசாணை நிறுத்தி வைக்கப்பட்டது.

இதனால் பதவி உயர்வு அளிக்கப்பட்ட 58 உதவி இயக்குனர்கள் கால்நடை மருந்தகங்களில் உதவி மருத்துவர் நிலையில் மீண்டும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதனால் கால்நடை டாக்டர்கள் கொதித்து போய் உள்ளார்கள்..என்ன?அரசாங்கமோ?தாத்தா முணு முணுத்தார்.