Home தமிழகம் வருமானவரி சோதனைக்கு ஒருவில் கோ மாதாறக்கு பூஜை நடத்திய தினகரன் குடும்பம்

வருமானவரி சோதனைக்கு ஒருவில் கோ மாதாறக்கு பூஜை நடத்திய தினகரன் குடும்பம்

13
0
SHARE

சென்னை, நவ. 10&

சென்னை அடையாறில் உள்ள தினகரன் வீட்டுக்கு நேற்று அதிகாலை வருமான வரித்துறையினர் சென்றிருந்தபோது, டி.டி.வி தினகரனும், அவர் குடும்பத்தினரும் கோமாதா பூஜை செய்ய ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தனர்.

வருமான வரிசோதனை நடந்ததால் அந்தகோபூஜையில் சிறிய நேரம் இடையூறு ஏற்பட்டதுவருமான வரித்துறை அதிகாரிகளிடம் அனுமதி கேட்டு 10.30 மணிக்கு கோமாதா பூஜையை நடத்தினார். இதற்காக கருப்பு&சாம்பல்நிறபசுமாட்டைகன்றுடன்

தயாராக கொண்டு வந்திருந்தனர்.அந்த பசு மாட்டுக்கு மாலை அணிவித்து பூஜைகள் நடத்தப்பட்டது. டி.டி.வி.தினகரனும், அவர் மனைவி அனுராதாவும் அந்த பசு மாட்டுக்கு தீபாரானை காட்டப்பட்டது. பிறகு அந்த பசு மாட்டுக்கு அவர்கள் இருவரும் வாழைப்பழம் சாப்பிட கொடுத்தனர்.

சஷ்டி திதி, புணர்பூச நடசத்திர சுயமுகூர்த்த நாள் என்பதால் இந்த கோ பூஜையை அவர்கள் செய்ததாக தெரிகிறது. பொதுவாக செல்வம் பெருகவும்,சோதனைகளை கடந்த சாதனைகள் படைக்கவும் ஜோதிட ரீதியாக கோமாதா பூஜை செய்யப்படுவதுண்டு. டி.டி.வி.தினகரன் குடும்பத்தினரும் அந்த நேரத்தில் கோ பூஜையை நடத்தியதாக தெரிகிறது.

வருமான  வரித்துறை அதிகாரிகள் அவர்கள் வீட்டை முற்றுகையிட்டு அங்குலம், அங்குலமாக சோதனை நடத்திக்கொண்டிருந்த நிலையில் தினகரனும் அவர் மனைவியும் கொஞ்சமும் பதற்றமின்றி இந்த பூஜையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.