Home சம்பவம் கடம்பத்தூர் ஒன்றியத்தில் பன்றிகள் கூட்டத்தால் சுகாதார சீர்கேடுகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

கடம்பத்தூர் ஒன்றியத்தில் பன்றிகள் கூட்டத்தால் சுகாதார சீர்கேடுகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

17
0
SHARE

திருவள்ளூர், நவ. 10& வெங்கத்து£ர் ஊராட்சியில் பன்றிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால், அவைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர் அடுத்துள்ள கடம்பத்தூர் ஒன்றியத்தில் உள்ளது வெங்கத்தூர் ஊராட்சி. இதன் அருகில் வெளிநாட்டைச் சேர்ந்த கனரக வாகனங்கள் மற்றும் கார் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன. அங்கு, 3,000&ம் மேற்பட்ட குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் இருக்கின்றன.

இந்த ஊராட்சியில், பன்றிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இவைகள், சாக்கடைக்கால்வாய்களில் படுத்து உடல் முழுதும் கழிவுச்சேறுகளுடன் நடமாடுவது சர்வ சாதாரணமாக உள்ளது. மேலும், அங்குள்ள கூவம் ஆற்றங்கரையில் கூட்டம் கூட்டமாக படுத்துக் கிடக்கின்றன. கன்றுக் குட்டிகள்போல் தோற்றம் கொண்ட இந்த பன்றிகளைக் கண்டு, அப்பகுதி மக்கள் பயப்படுகிறார்கள்.

இந்தக் கட்டுப்பாடற்ற பன்றிகளால் வெங்கத்தூர் ஊராட்சியின் சுகாதாரம் பாழ்பட்டு உள்ளது. இதுபற்றி, கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என்று பொதுமக்கள் புகார் மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பன்றிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

ஏற்கனவே வெங்கத்தூர் ஊராட்சியில் சாக்கடைக் கால்வாய்கள் அனைத்திலும் பன்றிகள் படுத்து கால்வாய் சுவர்கள் சரிந்து நாசமடைந்து விட்டன. இங்குள்ள, மணவாளநகரில் ஏற்கனவே பள்ளி மாணவி ஒருத்தி டெங்கு காய்ச்சலுக்கு பலியானார். இந்தநிலையில் தற்பொழுது பெய்த கனமழையில் தெருக்கள் முழுதும் நாசமடைந்து சாலைகள் குண்டும் குழியுமாகி விட்டன.

அத்துடன், சுகாதார சீர்கேடுகளும் அதிகரித்து வருகின்றன. ஆதலால் நோய் பரப்பும் பன்றிகளை அப்புறப்படுத்தி சுகாதாரத்தை மேம்படுத்திட சம்பந்தப்பட்டவர்கள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோருகிறார்கள்.