Home சிறப்புச் செய்திகள் ‘இரட்டை இலை’ சின்னம் முடக்கப்படுமா…?

‘இரட்டை இலை’ சின்னம் முடக்கப்படுமா…?

19
0
SHARE

காலியிலிருந்து வீட்டுக்குள் அங்கும் இங்கும் நடந்துகொண்டே இருந்தார். பாட்டிக்கு தாத்தாவிடம் கேட்க கொஞ்ச பயம். அதனால் இளைஞர்களுக்கு போன் செய்து, தாத்தா டென்சனில் இருக்கிறார், அதனால் சீக்கிரம் வாங்க என்றார். இளைஞர்கள் முன்னதாக வந்துவிட்டார்கள்.என்ன ஆச்சரியமாக இருக்கிறது, என்ற தாத்தாவிடம் சிரித்துக் கொண்டே கேட்க,பதில் சொல்லவில்லை தாத்தா.

   நடிகர் கமல், ரஜினிகாந்துக்கு முன்னாடி கட்சி தொடங்க முடிவு செய்துவிட்டார். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.  அதனால் நடிகர் கமல், இந்தியளவில் பத்திரிகைகளில் தொடர்பு வேண்டும் என்பதற்காக  பத்திரிகை தொடர்பு குழுவில், மும்பையைச் சேர்ந்த பெண்மணி, மாண்ட்வி ஷர்மா இடம் பெற்றுள்ளார்.  அரசியல் பிரவேச அறிவிப்பிற்கு பின், பத்திரிகையாளர்களை, கமல் அடிக்கடி சந்திக்கிறார். தமிழ் பத்திரிகையாளர்களை, கமல் குழுவில், ஏற்கனவே உள்ள பிரதிநிதிகள் பார்த்துக் கொள்கின்றனர்.

எனினும், தேசிய தொலைக்காட்சிகளில் பணிபுரிவோரை ஒருங்கிணைப்பதில், சில சிக்கல்கள் இருந்தன. மேலும், கமல் தேசிய அளவில் அறியப்பட்டவர் என்பதாலும், அவருக்கு, அனைத்து மாநிலங்களையும் எளிதில் அடையக்கூடிய, பத்திரிகை தொடர்பு குழு தேவைப்பட்டது. அதனால் மும்பையைச் சேர்ந்த, மாண்ட்வி ஷர்மா என்பவரை, தனக்கான பத்திரிகை தொடர்பு பணிகளை மேற்கொள்ள, கமல் அமர்த்தி உள்ளார். மாண்ட்வி, பிரபல நடிகர், ஷாரூக் கானின், ‘ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட்’ நிறுவனத்தில், ஊடக தொடர்பு பிரிவில், தலைமை அதிகாரியாக பணிபுரிந்தவர். சரி..என்ன நடக்கிறது என்று பார்ப்போம் தாத்தா கூறியதும், இளைஞர்கள் தாத்தாவிடம் சினிமா தொடர்புடையவர்களை தவிர நல்ல அரசியல்வாதி முதல்வராக வர முடியாதா தாத்தா என்று கேட்டனர்.

அதற்கு, தாத்தா ஏன் முடியாது… அப்படி மக்கள் விரும்பும் ஒருஅரசியல்வாதி  வந்தால் வரவேற்கலாம் என்று நீண்ட பெருமூச்சை விட்டு விட்டு அடுத்த செய்திக்கு தாவினார்.  சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து, கூவம், அடையாறு ஆறுகள், பக்கிங்ஹாம் கால்வாய் வழியாகவும், 12 நாட்களில், 12 டி.எம்.சி., மழைநீர், கடலில் வீணாக கலந்துள்ளது. கூவத்தில் மட்டும், அக்., 27 முதல், நேற்று முன் தினம் வரை, 12 நாட்களில், 4.12 டி.எம்.சி., நீர் கடலில் கலந்து உள்ளது. அதிகபட்சமாக, நவம்பர், 1ல் மட்டும், 1.08 டி.எம்.சி.,நீர் கலந்துள்ளது.

பக்கிங்ஹாம் கால்வாயில், வடக்கு பக்கிங்ஹாம் கால்வாய் நீர் எண்ணூரிலும், தெற்கு பக்கிங்ஹாம் கால்வாய் நீர் முட்டுக்காடு முகத்துவாரங்களிலும் கலக்கிறது. இவற்றில், தினமும், 1,500 முதல், 2,000 கன அடி நீர், கடலுக்குள் செல்கிறது. 12 நாட்களில், 1.5 முதல், 1.75 டி.எம்.சி., நீர் கடலில் கலந்துள்ளது.  அடையாற்றை பொறுத்தவரை, கடலில் கலக்கும் நீரை  துல்லியமாக கணக்கிட வில்லை. தற்போது தான், சென்னை ஐ.ஐ.டி., மற்றும் அண்ணா பல்கலை இணைந்து, ஆற்றில் வீணாகும் நீரை துல்லியமாக கணக்கிட்டு வருகின்றன. இந்த விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை.   நந்தம்பாக்கம் தடுப்பணை அருகே, பொதுப்பணித் துறை கணக்கெடுப்பு ஒன்றை நடத்துகிறது. இதன் படி, அடையாறு ஆற்றிலிருந்து, வினாடிக்கு, 6,000 முதல், 10 ஆயிரம் கன அடி தண்ணீர், கடலில் கலப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதன்படி, 12 நாட் களில்,5 டி.எம்.சி.,க்கு அதிகமான நீர் கடலில் வீணாக கலந்திருக்கலாம். பருவ மழை துவங்கியது முதல், 12 நாட்களில்,   மூன்று நீர்வழித்தடங்களிலும் சேர்த்து, 12 டி.எம்.சி.,க்கும் அதிகமான நீர், கடலில் வீணாக கலந்துள்ளது. இதை முறையாக சேமித்திருந்தால், சென்னை மக்களின், 10மாத நீர் தேவையை பூர்த்தி செய்திருக்க முடியும்.  சென்னையில், ஏரிகளின் மொத்த கொள்ளளவு, 11 டி.எம்.சி.,யாகவே உள்ளது. கிடைக்கும் மழைநீரை முறையாக சேமிக்கும் அளவில், போதிய நீர் நிலைகள் இல்லை. தற்போது  இருக்கும் நீர் நிலைகளின், நீர் வரத்து கால் வாய்கள் முறையாக பராமரிக்காததாலும், கொள்ளளவை மேம்படுத்த அக்கறை காட்டாததாலும், மழைநீர் வீணாக கடலில் கலந்து வருகிறது.சென்னை மாநகரம், இந்தாண்டு கோடையில், 142 ஆண்டுகளாக இல்லாத வறட்சியை சந்தித்தும், மழைநீரை சேமிக்க, அரசு சிறப்புக்கவனம் செலுத்தாதது, மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, என்று தாத்தா ஆவேசமாக புலம்பினார்..

இரட்டை இலை சின்னம் தொடர்பான தேர்தல் ஆணையத்தில் விசாரணை முடிந்துவிட்டது. எழுத்து மூலம் 13ம் தேதி வரை ஆவணங்களை தாக்கல் செய்யலாம். டில்லி நண்பர்கள் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டுவிடும் என்கிறார்கள்.. எம்.ஜி.ஆர் சின்னமான இரட்டை இலை சின்னம்  முடக்கப்பட்டால், அ.தி.மு.க தமிழ்நாட்டில் தலை தூக்க முடியாது என்ற தாத்தாவிடம் இளைஞர்கள் டாடா காட்டிவிட்டு புறப்பட்டார்கள்.