Home அரசியல் ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவரானது எப்படி? முதல்வர் விளக்கம்

ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவரானது எப்படி? முதல்வர் விளக்கம்

16
0
SHARE

சென்னை, நவ. 10& ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவரானது எப்படி என்று முதல்வர் தெரிவித்தார். தேனியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

எதிர்க்கட்சித் தலைவர் மு..ஸ்டாலின்  சென்னையிலே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுகின்றேன் என்று சொல்லி ஒரு சில இடங்களுச் சென்று பார்த்துவிட்டு பேட்டி கொடுக்கிறார். அவர் தாழ்வான பகுதிகளிளெல்லாம் மழைநீர் தேங்கியிருக்கின்றது. இந்தத் தண்ணீரை அகற்றமுடியாத அரசு தேவைதானா? செயலிழந்த அரசு என்று அரசைப்பற்றி விமர்சனம் செய்கின்றார்.

நாங்கள் கேட்கின்றோம். இவர் ஐந்தாண்டு காலம் சென்னையினுடைய மேயராகவும் இருந்தார், ஐந்தாண்டு காலம் உள்ளாட்சித் துறை அமைச்சராகவும், துணை முதலமைச்சராகவும், ஆக 10 ஆண்டுகாலம் சென்னை மாநகரத்தில் எதுவுமே செய்யவில்லை. ஆனால், இரண்டு பொறுப்புகளையுமே, பதவிகளையுமே உள்ளாட்சி அமைப்பின்கீழ் வருகின்ற பதவி. இந்த உள்ளாட்சி அமைப்பின் மூலம் நிறைய திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று சொன்னால் இந்த இரண்டு பொறுப்புகளையும் அவர் வைத்திருந்தார்.

ஏன் அப்பொழுதெல்லாம் இந்த  சென்னை மாநகரத்தைப் பற்றிச் சிந்திக்கவில்லையா? இப்பொழுதுதான் ஞானம் வந்துவிட்டதா? இன்றைக்கு அரசு விரைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. இன்றைக்கு சென்னை மாநகரத்தில் மழைக்காலங்களிலே தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கி நிற்பது மாநகராட்சி ஊழியர்களால் உடனுக்குடன் அகற்றப்பட்டு வருகின்றது.

ஆனால் இவர் மேயராக இருந்தா காலத்தில் வாரத்திற்கு ஒரு முறைதான் சென்னை மாநகராட்சி அலுவலகத்திற்கே சென்றதாகச் சொல்கின்றார்கள். சென்னை மாநகரத்தை சுற்றிப் பார்க்கவில்லை. இப்பொழுது நாள்தோறும் கொளத்தூர் பகுதிக்கு செல்கிறார்அப்பொழுதுபோய் பார்த்திருந்தால் இந்தப் பிரச்சினையே வந்திருக்காது.

இப்பொழுது செல்வதைப்போல இவர் மேயராக இருந்தபொழுதும், உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபொழுதும் சென்னை மாநகராட்சிப் பகுதியை எல்லாம் சுற்றிச் சுற்றி வலம் வந்திருந்தால் இந்த தண்ணீர் தேங்கியிருக்கும் நிலை ஏற்பட்டிருக்காது. அப்பொழுதெல்லாம் கோட்டை விட்டுவிட்டார். இவருக்கு மக்கள் பதவி கொடுத்தபொழுது அந்தப் பதவியை சரியாகச் செய்ய தவறிவிட்ட காரணத்தினால் மக்கள் அவரை மறந்தார்கள், இன்றைக்கு எதிர்க்கட்சியாகித் தலைவராகிவிட்டார்.  இவ்வாறு பேசினார்.