Home சிறப்புச் செய்திகள் நான் ஆணையிட்டால்  ஒரு அரசியல், காதல் படம் & ராணா சிறப்பு...

நான் ஆணையிட்டால்  ஒரு அரசியல், காதல் படம் & ராணா சிறப்பு பேட்டி

34
0
SHARE

பாகுபலி வெற்றிக்குப் பிறகு ராணாவுக்கு அதே போன்ற ஒரு வெற்றியை கொடுக்க நினைத்து தேஜா இயக்கத்தில் பரபரப்பான அரசியல் படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.  தமிழில் நான் ஆணையிட்டால் என்ற பெயரில் டப் செய்யப்படும் இந்த படத்திற்காக சென்னை வந்திருந்த ராணாவின் பேட்டி.பாகுபலி வெற்றிக்குப் பிறகு நடித்திருக்கும் இந்த படம் அதே போன்ற ஒரு வெற்றியை கொடுக்குமா?

நிச்சயமாக காரணம் படத்தில் தற்போதையை அரசியல் நிகழ்வுகளை பிரதிபலிக்கும் காட்சிகள் இருக்கிறது.

அதுவும் தமிழ் நாட்டில் நடக்கும் அரசியல் சம்பவங்கள் சிலவற்றை படத்தில் பார்க்கலாம்.

இது திட்டமிட்டு வைக்கப்பட்டதா?

இல்லை. இப்போது தமிழ்நாட்டில் நடந்த நிகழ்ச்சி போல பல வருடங்களுக்கு முன்பு ஆந்திராவில் நடந்தது. அந்த சம்பவத்தைதான் இயக்குனர் தேஜா படத்தில் வைத்திருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் தமிழ்நாட்டில் அந்த சம்பவ நடப்பதற்கு முன்னாலே நாங்கள் இந்த படத்தை எடுத்து முடித்து விட்டோம்.

சினிமாவில் வேறு வேறு மாதிரியான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கிறீர்களே எப்படி?

புதுசா ஏதாவது முயற்சி செய்து பார்க்க வேண்டும் என்கிற ஆசை எனக்குள் இருந்து கொண்டே இருக்கும். அப்படி நான் நடித்ததுதான் நீர் மூழ்கிகப்பலில் எடுக்கப்பட்ட படம். பாகுபலியில் வில்லன் வேடம் இது அரசியல் படம். ஆந்திராவில் இப்படிபட்ட எக்ஸ்பிரிமண்டல் படம் ரொம்பவும் குறைவுதான்.

நான் ஆணையிட்டால் படம் பற்றி சொல்லுங்கள்?

எனக்கு இந்த படம் ரொம்பவும் ஸ்பெஷல்  நான் ஸ்கூல் படிச்சிட்டிருக்கும் போது  இயக்குனர் தேஜா சார் பிரமாண்டமான இயக்குனராக இருந்தார். அவரது பெயர் படத்தின் இடைவேளையில் போடுவார்கள். அப்போது ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்வார்கள். அந்தளவுக்கு பெரிய ஸ்டார் இயக்குனராக இருப்பவர். இன்றைக்கு நான் நடிகராகி அவர் படத்திலேயே நடிப்பேன் என்று நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது.

படத்தில் உங்கள் கதாபாத்திரம்?

ஜோகேந்திரா என்ற அந்த கேரக்டருக்கும் எனக்கும் சம்மந்தமே இல்லை. ஆனால் எனக்காக பாகுபலி படம் முடியும் வரைக்கும் இயக்குனர் தேஜா காத்திருந்தார். கதையை இன்னும் நல்லா டெவலப் செய்துகொண்டிருந்தார். இந்த படத்தைப் பார்க்க நானே ஆர்வமாக இருக்கிறேன். எனக்கு இந்த கேரக்டரை கொடுத்ததற்கு இயக்குனர் தேஜாவுக்குதான் நன்றி சொல்லணும்.

ஹீரோயின் காஜல் அகர்வால் பற்றி சொல்லுங்கள்?

இது அரசியல் படமாக இருந்தாலும் முழுக்க ஒரு கணவன் மனைவிக்குமிடேயேயான காதல் தான் அடிப்படியாக இருக்கும். ராதா ஜோகேந்திரா என்ற காஜலின் கதாபாத்திரம் பேசப்படும்

படத்தில் அரசியல் வசனம் நிரைய இருக்கிறதே?

கண்டிப்பாக இது சாமானிய மனிதன் ஒருவனைப்

பற்றிய கதைதான். இந்த அரசியல் அபவர் போட்டி உலகத்தில் அவன் எப்படி வாழ்கிறான் என்பதை பிரபலிப்பாக காட்டியிருக்கும் அந்த கேரக்டர். அப்படிப் பேசப்படும் வசனங்களாகதான் இருக்குமே தவிர இப்போதைய அரசியல் சூழலுக்காக  எழுதப்பட்டவை அல்ல.