Home மற்றவை இந்திய அமெச்சூர் குத்துச்சண்டை போட்டி சென்னை மாணவி 2&ம் இடம்மாநகராட்சி ஆணையர் வாழ்த்து

இந்திய அமெச்சூர் குத்துச்சண்டை போட்டி சென்னை மாணவி 2&ம் இடம்மாநகராட்சி ஆணையர் வாழ்த்து

4
0
SHARE

சென்னை, நவ. 10& இந்திய அமெச்சூர் குத்துச்சண்டை அமைப்பு நடத்திய குத்துச்சண்டை போட்டியில் தேசிய அளவில் இரண்டாம் இடம் பெற்ற சென்னைப் பள்ளி மாணவி சரண்யா, சென்னை மாநகராட்சி ஆணையாளர் தா.கார்த்திகேயனை ரிப்பன் மாளிகையில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட புத்தா தெரு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு பயின்று வரும் மாணவி சரண்யா (14) இந்திய அமெச்சூர் குத்துச்சண்டை அமைப்பின் மூலம் இராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் நகரில் நடத்தப்பட்ட 8வது தேசிய குத்துச்சண்டை சாம்பியன் சப் ஜூனியர் போட்டியில் பி6 எடைப்பிரிவில் கலந்து கொண்டு இரண்டாம் இடம் பெற்று வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளார்

மாணவி சரண்யா தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் நடத்தப்பட்ட குத்துச்சண்டைப் போட்டியில் (சப் ஜூனியர் பெண்கள் பிரிவு) 2015&16, 2016&17 ஆகிய ஆண்டுகளில் மாநில அளவில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார்மாநகராட்சி கல்வித்துறையின் அனுமதியுடன் குத்துச்சண்டை பயிற்சிக்கு அனுப்பப்பட்டார்.  மாணவி சரண்யா தனது தாயார் மற்றும் தலைமையாசிரியருடன் மாநகராட்சி ஆணையாளரை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார்

வெற்றி பெற்ற மாணவியை ஆணையாளர் பாராட்டி, புத்தகத்தை பரிசாக வழங்கினார்.  இந்நிகழ்வின்போது, துணை ஆணையர் (கல்வி) மகேஸ்வரி ரவிக்குமார்,  பள்ளித் தலைமையாசிரியை எம்.சிவகாமி மற்றும் மாணவியின் பெற்றோர் உடனிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here