Home மற்றவை குர்கான் பள்ளி மாணவன் கொலை 11&ம் வகுப்பு மாணவன் கைதுவழக்கில் திடீர் திருப்பம்

குர்கான் பள்ளி மாணவன் கொலை 11&ம் வகுப்பு மாணவன் கைதுவழக்கில் திடீர் திருப்பம்

8
0
SHARE

குர்கான், நவ. 9&

செப்டம்பர் 8&ம் தேதி  ரயான் சர்வதேச பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்த 7 வயது மாணவன் பிரதியுமன் கழிவறையில் ஆயுதம் ஒன்றால் கடுமையாக தாக்கப்பட்டு இறந்து கிடந்தான்.

அந்த வழக்கில் சந்தேகத்தின் பேரில் பள்ளி பேருந்தின் நடத்துனர் நோய்டா போலீசாரால் கைதுசெய்யப்பட்டார். கொல்லப்பட்ட சிறுவனின் தந்தை அளித்த மனுவின் பேரில் இந்த வழக்கை சி.பி.. எடுத்து விசாரித்து வருகிறது. இந்நிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக செவ்வாய்கிழமை இரவு 11.30 மணிக்கு, பிரதியுமன் படித்த அதே பள்ளியை சேர்ந்த 11&ம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவன் சி.பி..யால் கைது செய்யப்பட்டார். பள்ளியில் குறைந்த மதிபெண் வாங்கும் அந்த மாணவன், அன்று நடக்க இருந்த பெற்றோர்& ஆசிரியர் கூட்டத்தையும் ஒரு தேர்வையும் ஒத்திபோடவே சிறுவனைக் கொன்றுள்ளதாக சி.பி.. தெரிவித்துள்ளது. இந்த கொலை தொடர்பாக மாணவனிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தப்படும் என்றும் சி.பி.. தரப்பில் கூறப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மாணவர் நேற்று (புதன்கிழமை) குர்கான் சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். நீதிமன்றம் மாணவனை 6 நாள் சிபிஐ காவலில் வைக்க அனுமதி தரவேண்டும் என சிபிஐ கோரியது. ஆனால் 3 நாள் மட்டுமே சி.பி.. காவலுக்கு அனுமதி வழங்குவதாக நீதிமன்றம் கூறியது.

வரும் சனிக்கிழமை வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஏற்கனவே கைது செய்யப்பட்ட பள்ளிப் பேருந்து நடத்துநர் விடுதலை செய்யப்படவில்லை. அவர் மீதான புகார் விலக்கிக் கொள்ளப்படவில்லை என சி.பி.. விசாரணை அதிகாரிகளுள் ஒருவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here