Home இந்தியா டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பால்  சுகாதார அவசர நிலை பிரகடணம் பள்ளிகளுக்கு...

டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பால்  சுகாதார அவசர நிலை பிரகடணம் பள்ளிகளுக்கு விடுமுறை

7
0
SHARE

புது டெல்லி, நவ. 9&

டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பால் சுகாதார அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டதால் பள்ளிகளுக்கு விடுமுறை விடபட்டது.

இந்தநிலையில்டெல்லியில்காற்றில்பி.எம். 2.5 எனப்படும் நுண்ணியமாசின் அளவு 703 புள்ளியாக அதிகரித்துள்ளது. அனுமதிக்கப்பட்ட 300 புள்ளியைவிட இரு மடங்குக்கு அதிக அளவில் டெல்லி நகரில் காற்றில் மாசு கலந்து இருக்கிறது.

நள்ளிரவுக்குமேல்பணிபொழிவுஇருப்பதால்கடந்தஇருதினங்களாகடெல்லியில்காற்றுமாசுஅதிகரித்துள்ளது. இதனால் மக்களின் உடல் நலம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சுவாச கோளாறு இதயம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. டெல்லி நகர் முழுவதும் நேற்று புகை மண்டலமாக காட்சி அளித்தது. வயதானோர் மற்றும் குழந்தைகள் கடும் அவதிபட்டனர். இதையடுத்து இந்திய மருத்துவசங்கம் பொது சுகாதார அவசர நிலையை பிரகணடபடுத்தி உள்ளது. இதுகுறித்துஅந்த சங்கத்தின் தலைவர் கிருஷ்ணன் குமார் அகர்வால் நிருபர்களிடம் கூறியதாவது;

டெல்லி நகரில் காற்றின் மாசு அளவு அபாயகரமான நிலைக்கு சென்றுள்ளது. இதனால் பொது சுகாதார அவசர நிலையை பிரகடணப்ப டுத்தியுள்ளோம்.  இந்த பிரச்சனைக்கு தீர்வு காண டெல்லி மாணகர அதிகாரிகள் உடனடியாக தெவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

டெல்லி புகை மண்டலமாக மாறியது எனவே 5ம் வகுப்பு வரை உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு கால வரையற்ற விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளது. குழந்தைகளை வீட்டை விட்டு அனுப்ப வேண்டாம் என் குழந்தைகளுக்கு அரசுசார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்று மாசு அதிகரிப்பை தொடர்ந்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு 9 ஆயிறம் முக கவசங்கள் அளிக்கப்பட்டுள்ளது. மேலும்விமான சேவையிலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பை தொடர்ந்து டெல்லி, உத்திரபிரதேசம் அரியானாமாநில அரசுகளுக்கு தேசிய பசுமை தீர்பாயம் கண்டனம் தெரிவித்துள்ளது. காற்று மாசு அதிகமாவதை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்காதது ஏன் ? என்பதற்கு விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here