Home இந்தியா பண மதிப்பு நீக்கத்தை ஆதரிக்கும் மக்களுக்கு தலை வணங்குகிறேன்டுவிட்டரில் பிரதமர் மோடி பாராட்டு

பண மதிப்பு நீக்கத்தை ஆதரிக்கும் மக்களுக்கு தலை வணங்குகிறேன்டுவிட்டரில் பிரதமர் மோடி பாராட்டு

12
0
SHARE

புதுடெல்லி, நவ. 9&

பண மதிப்பு நீக்கத்தை ஆதரிக்கும் மக்களுக்கு தலை வணங்குவதாக பிரதமர் மோடி டிவிட்டரில் பாராட்டியுள்ளார்.

பண மதிப்பு நீக்க நடவடிக்கையானது நீண்டகால இந்திய பொருளாதாரத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று மத்திய அரசு கூறிவருகிறது.

பணமதிப்புநீக்கம்அறிவிக்கப்பட்டநவம்பர் 8 &ந்தேதியை கருப்பு தினமாக எதிர்க்கட்சிகள் கடைபிடிக்கும் நிலையில், மத்திய அரசு நேற்றைய தினத்தை, கருப்பு பணத்தை ஒழிக்கும் தினமாக கொண்டாடி வருகிறது

எதிர்க்கட்சிகளின் நேற்றைய ஆர்ப்பாட்டத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மத்திய மந்திரிகள் பண மதிப்பு நீக்கம் குறித்து விளக்கம் அளித்து வருகிறார்கள்.  பண மதிப்பு நீக்கத்தால் கிடைத்துள்ள நன்மைகள் பற்றி நாடு முழுவதும் பத்திரிகைகள் வாயிலாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.  அவற்றில், மத்திய அரசின் நடவடிக்கைகள் அனைத்தும் நியாயமானவை.

நெறிசார்ந்தவைஎன்றுகூறப்பட்டுள்ளது.  இந்த நிலையில் பிரதமர் மோடி நேற்று காலை தனது டிவிட்டர் பக்கத்தில் பண மதிப்பு நீக்கம் தொடர்பாக ஒரு பதிலை வெளியிட்டார்.  அதில் அவர் கூறியிருப்பதாவது:&  கருப்புப் பணம் மற்றும் ஊழலுக்கு எதிராக இந்தியாவின் 125 கோடி மக்களும் போரிட்டுள்ளனர்.  இதில் மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது.

ஊழலையும், கருப்புப் பணத்தையும் ஒழிக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளுக்கும், பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கும் மக்கள் ஆதரவையும், ஒத்துழைப்பையும் தந்துள்ளனர். அவர்களுக்கு நான் தலை வணங்குகிறேன்.

இவ்வாறு பிரதமர் மோடி அதில் கூறியுள்ளார்.