Home மற்றவை விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம்

விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம்

8
0
SHARE

காஞ்சிபுரம், நவ. 9&

காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயல் வீரர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மானாம்பதி கிராமத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில், உத்திரமேரூர் மேற்கு ஒன்றிய செயலாளர் வின்சென்ட் தலைமை தாங்கினார். மாநில துணைப் பொது செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி, மேற்கு மாவட்ட செயலாளர் பு.பெ.கலைவடிவன், உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் தி..எழிலரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் செல்வராசு வரவேற்றார்.

நிகழ்ச்சியில்புதியஉறுப்பினர்கள்சேர்க்கை, கட்சி கொடிகள் மற்றும் கல்வெட்டுகளை சீரமைத்தல், மழைக் காலங்களில் பொது மக்களுக்கு நிவாரணம் வழங்குதல் மற்றும் மழையால் பொது மக்கள் பாதிக்கப்பட்டால் உடனடியாக உதவிகள் செய்திடுதல், தாங்கள் வசிக்கும் பகுதிகளில் நோய்கள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளுதல் உட்பட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் நாகப்பன், உதயகுமார், தீர்த்தகிரி, ஸ்ரீதர் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய பொருளாளர் தயாளன் நன்றி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here