Home மற்றவை தூய்மை பாரத இயக்கத்தின் திட்ட பொறுப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்

தூய்மை பாரத இயக்கத்தின் திட்ட பொறுப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்

9
0
SHARE

காஞ்சிபுரம், நவ. 9&

உத்திரமேரூரில் து£ய்மை பாரத இயக்கத்தின் திட்ட பொறுப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றிய தூய்மை பாரத இயக்க திட்ட தொகுப்பு பொறுப்பாளர்கள் மற்றும் ஊக்குனர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் து£ய்மை பாரத திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கெம்பு தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பரணி, ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கிராமப்புறங்களில் கழிவறை கட்டப்படாத நபர்களை உடனடியாக கட்டி முடிக்க அறிவுறுத்த வேண்டும், திடக்கழிவு மேளாண்மை திட்டத்தில் வீட்டின் கழிவுகள் முறையாக வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், கிராமப்புறங்களில் பணியாற்றும் தூய்மை பாரத இயக்க பொறுப்பாளர்கள் வீடுவீடாகச் சென்று சுகாதாரம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க வேண்டும், மேலும், கிராமங்களில் கழிவறை கட்டாதவர்கள் மற்றும் சுகாதார சீர்கேடு ஏற்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்க வேண்டும் உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here