Home மற்றவை வில்லிவாக்கத்தில் பயங்கரம் வீட்டில் டிவி பார்த்துக்கொண்டிருந்த 3 வயது சிறுமி மர்ம கொலை  

வில்லிவாக்கத்தில் பயங்கரம் வீட்டில் டிவி பார்த்துக்கொண்டிருந்த 3 வயது சிறுமி மர்ம கொலை  

4
0
SHARE

சென்னை, நவ, 9 சென்னை, வில்லிவாக்கம் பகுதியில், வீட்டில் டிவி பார்த்துக்கொண்டிருந்த, 3 வயது சிறுமி மர்மமான முறையில் கொல்லப்பட்டு கிடந்தாள். அந்த சிறுமியை, கடத்தி கொலை செய்தது யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை, வில்லிவாக்கம்,  பாரதி நகரில் வசித்து வருபவர் வெங்கடேசன்(39),  இவர் பழ வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி ஜெயந்தி இவர்களுக்கு,  காவ்யா ( 3) என்ற குழந்தை இருந்தது.   கை குழந்தை ஒன்றும் உள்ளது. இந்நிலையில்,  நேற்று முன் தினம் மாலை,  மழை பெய்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில்,  கடைக்கு மளிகை பொருட்கள் வாங்குவதற்கு,  தனது கை குழந்தையை தூக்கி கொண்டு சென்றார். அதற்கு முன், சிறுமி கவ்யாவை,  வீட்டில் டிவி பார்த்து கொண்டிருக்க சொல்லி விட்டு, தாய் ஜெயந்தி கதவை வெளி தாழ்ப்பாள் போட்டு சாத்தி விட்டு சென்று விட்டார். இதை தொடர்ந்து, கடைக்கு சென்று விட்டு, அரை மணி நேரம் கழித்து வந்து பார்த்த போது,  கதவு திறந்து கிடந்தன. அதிர்ச்சியடைந்த ஜெயந்தி, வீட்டுக்குள்  ஓடினார். டிவி பார்த்துக் கொண்டிருந்த சிறுமி காவ்யா  காணவில்லை. அதிர்ச்சியடைந்த தாய் ஜெயந்தி சிறுமி காவ்யாவை அந்த பகுதி முழுவதும் தேடினார். அவர் மயமாகியிருந்தார். இது குறித்து வில்லிவாக்கம் போலீசில் தந்தை வெங்கடேசன் புகார் அளித்தார். இந்நிலையில், நேற்று  காலை வில்லிவாக்கம்,  பாரதி நகர் பகுதியில் இருந்து, சுமார்  500 மீட்டர் தொலைவில், சிறுமி காவ்யாவின் சடலம் , வாயில் நுரை தள்ளியபடி கிடந்தது. இதனை பார்த்த அந்த பகுதியினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த போலீசார் சிறுமியின் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் இறந்த சிறுமியின் உடலில் காயங்கள் காணப்படுவதாக தெரிகின்றன. வெளி தாழ்ப்பாள் போடப்பட்ட நிலையில்,  வீட்டுக்குள் டிவி பார்த்து கொண்டிருந்த சிறுமி வெளியே கடத்தி சென்று கொன்றது யார் என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here