Home தமிழகம் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் பள்ளிகளில் உள்ள பழுதடைந்த கட்டிடங்கள் இடிக்கப்படும் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் பள்ளிகளில் உள்ள பழுதடைந்த கட்டிடங்கள் இடிக்கப்படும் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

12
0
SHARE

சென்னை, நவ.9& தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பழுதடைந்த கட்டிடங்களை, மாவட்ட ஆட்சியர்  முலம் இடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

பாரத சாரணர் சாரணியர் இயக்கத்தில் புதியதாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான தலைமைப் பண்புகளுக்கான பயிற்சி முகாமை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.. செங்கோட்டையன் நேற்று துவக்கி வைத்து, பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழியிலான அரசில் பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் சாரண சாரணியர் இயகத்தில்பல்வேறு பகுதிகளில் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களுக்கு  தலைமைப் பண்பு வளர்க்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.

சாரண சாரணியர் இயக்கம் தன்னலம் கருதாமல் மக்களுக்கு சேவை செய்து வருகிறது. இந்தியாவில் முதன் முதலில் 1909 ம் ஆண்டு இந்தியாவில் முதன் முதலில் சாரண இயக்கம் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டது.

இந்த இயக்கத்தில் உலகளவில் 216 நாடுகளில் 4 கோடி பேர் சாரண சாரணியர் இயக்கத்தில் உள்ளனர். இந்த பயிற்சி அதன்படி சிறந்த சேவை மனப்பான்மையுடன் தன்னலம் கருதாமல் சமுக நோக்கத்துடன் உருவாக்குவதற்கும், மற்றவர்களுக்கு உதவிக் கரம் நீட்டுவதற்கும் பல்வேறு நிலைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இவர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளனர்.

சாரண சாரணியர் இயக்கத்திற்கு பயிற்சிக்கு ஆண்டுதோறும் அளிக்கப்பட்டுள்ள நிதி 12 லட்சமாக உள்ளதுஅந்த நிதி போதாது என்பதால் முதல்வருடன் கலந்து பேசி இவர்களுக்கு வைப்பு நிதியாக ரு.2 கோடி வழங்குவதன் முலமாக ஆண்டிற்கு ரு.20 லட்சம் வழங்குவதற்கு வழிவகை செய்யப்படும்.

பாரத சாரணியருக்கு திருவல்லிக்கேணியிலே உள்ள இடம் 1996 ம் ஆண்டிற்கு பிறகு மீண்டும் ஒப்பந்தம் புதுப்பித்து, கால நீடிப்பு வழங்காமல் உள்ளனர். இருந்தபோதும் அதனை பெற்றுத் தருவதற்கு முதல்வரிடம் பேசி உள்ளேன். அவர் பொதுப்பணித்துறை செயலாளரிடம் அதனை வழங்க உத்தரவிட்டுள்ளார்.

ஆலந்துரில் 25 ஏக்கர் நிலம் பயிற்சி பெறுவதற்காக இருக்கிறது. இந்த இடம் அதிரடிப்படையிடம் உள்ளதுஇந்த இடம் மீட்டு சாரண சாரணியர் பயிற்சி பெறுவதற்கு அளிக்கப்படும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாணவர்களுக்கு தேவையான பாடப்புத்தகங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மழைக்காலத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து மாவட்ட கல்வித்துறை அளிக்கும் முறை மீண்டும் கலந்து பேசி அறிவிக்கப்படும்.

தமிழகத்தில் பழுதடைந்த கட்டிடங்களை கண்டறிந்த அதனை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டி உள்ளது. அது குறித்து முதல்வரிடம் கலந்து பேசி, மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு, பழுதடைந்த கட்டிடங்களை இடிக்க மாவட்ட பொறியாளர், மாவட்டமுதன்மைக்கல்விஅலுவலர்அடங்கியகுழுஆய்வு செய்து அதனை இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

உள்ளாட்சித்துறை கட்டிடங்களாக இருந்தால் அதனை மாவட்ட ஆட்சியர் உடனடியாக அகற்றுவதற்கு உத்தரவிடுவார். பள்ளிக்கல்வித்துறையை பொறுத்த வரையில் இதுபோன்ற நிலையில்லை. அப்படி கவனத்திற்கு கொண்டு வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். போட்டித் தேர்விற்காக இதுவரை 73 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கான பயிற்சி விரைவில் துவக்கப்பட உள்ளது என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பள்ளிகல்வித்துறை செயலாளர் பிரதீப்யாதவ், தமிழ்நாடு  பாடநுல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் மேலாண்மை இயக்குனர் ஜெகந்நாதன், அனைவருக்கும் கல்வி மாநில திட்ட இயக்குனர் நந்தகுமார் மற்றும் பள்ளிகல்வித்துறை இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் கலந்துக் கொண்டனர்.