Home தலையங்கம் திசை மாறி செல்லலாமா…!

திசை மாறி செல்லலாமா…!

10
0
SHARE

இந்த சமுதாயத்தின் 4&ம் தூணாக மிக முக்கிய பொறுப்பில் பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் அமைந்து உள்ளன. பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு வெளியில் சொல்லா முடியா, ராணுவ ரகசியம் போன்று பல ஆயிரம் சமூக பொறுப்புகளும், அக்கறைகளும் உள்ளுக்குள் இருக்கின்றன.

இதனை மறுப்பதற்கில்லை. காங்கிரஸ் அல்லாத பிரதமர்கள் வரிசையில் மூத்தவர் மொராஜி தேசாய். இளையவர் வாஜ்பாய். மொராஜி தேசாய் காங்கிரசில் இருந்து பிரிந்து ஜனதா தளம் கட்சியை உருவாக்கி பிரதமர் பதவியை அலங்கரித்தவர்அவரின் ஆட்சிக்காலத்தில், அவர் எதிர்கொண்ட சவால்கள் ஆயிரம். அதன்பின்னர் முழுமையாக காங்கிரஸ் அல்லாத அரசாங்கமாக, பாரதிய ஜனதா 2000&ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது.

அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமரானார். அவரின் அமைச்சரவையில் ராணுவ அமைச்சர் பதவியை அலங்கரித்தவர் ஜார்ஜ் பெர்ணான்டஸ். முழுமையான ராணுவ வீரர் போன்று மிடுக்கானவர். இவர் மீது அடுக்கடுக்கான புகார்களை, தெகல்கா என்ற இணையதளம் வெளியிட்டு வந்தது. மனம் நொந்த ஜார்ஜ், தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அடுத்து வந்த லஷ்மண் மீதும் இந்த இணையதளம் தாக்குதலை தொடர்ந்ததுஇதையடுத்து தெகல்கா இணையதளம் செய்தி வெளியிடுவது போல், ஏதேனும் முறைகேடுகள் அமைச்சரவையில் நடந்ததா? என்பது குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி, எஸ்.எஸ். புக்கான் தலைமையில் விசாரணை கமிஷனை தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 2003&ம் ஆண்டு, ஜனவரி மாதம் அமைத்தது.

இந்த நிலையில் 2004&ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சி அதிகாரத்திற்கு வந்தது. அதன்பின்னர், அந்த இணையதள பத்திரிகை அதிபர்கள் நன்கு கவனிக்கப்பட்டு உள்ளனர். மேலும் அந்த அதிபர்கள் மீதான வழக்கு விசாரணையும் மட்டப்படுத்தப்பட்டு உள்ளது. இதுமட்டுமின்றி தெகல்கா நிறுவனத்திற்கு நிதி அளித்த அதிபர்களுக்கு, விசாரணை அமைப்புகள் தொந்தரவு கொடுக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அப்போதைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதமே எழுதி உள்ளார்.

இந்த தகவல்களை சமதா கட்சியின் முன்னாள் தலைவரான, ஜெயா ஜெட்லி தனதுலைப் அமங் தி கார்ப்பியன்ஸ்என்ற நூலில் அம்பலப்படுத்தி உள்ளார். இந்த செய்தி பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எழுத்து என்பது புனிதமான பணி. பன்முக தன்மை கொண்ட நம் நாட்டில், எழுத்தாளர்களின் பங்கு அளப்பரியது. நாட்டில் ஆங்கிலேயருக்கு எதிராக வெகுஜன மக்களையும் வெகுண்டு எழ செய்தது பிராந்திய மொழி பத்திரிகைகளே.

இதனை அண்மையில் நம் நாட்டு பிரதமரும் நினைவுப்படுத்தினார். பத்திரிகை சுதந்திரம் பேணிக் காக்கப்பட வேண்டும் என்பது எத்துணை உண்மையோ, அதேபோன்று பத்திரிகைகள் உறுதிப்படுத்தப்பட்ட செய்திகளை கொண்டதாக இருக்க வேண்டும் என்பது ஆணித்தனமாக உண்மை. இதனை தவறாக பயன்படுத்தினால், அது குற்றமாகும். தண்டிக்கப்பட வேண்டும் என்ற மகாத்மா வரிகளுக்கு கட்டுப்பட்டு நடப்போம். பத்திரிகைகள் திசைமாறி செல்லலாகாது..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here