Home சம்பவம் கூடுவாஞ்சேரி, மாடம்பாக்கம் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடர்கிறது

கூடுவாஞ்சேரி, மாடம்பாக்கம் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடர்கிறது

7
0
SHARE

படப்பை, நவ. 9& கூடுவாஞ்சேரி, மாடம்பாக்கம்  பகுதியில் அடையாறு கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடர்ந்து நடக்கிறது.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக  வரதராஜபுரம், ஆதனூர், ஊரப்பாக்கம், ஆகிய பகுதியில் உள்ள குடியிருப்புகளில் வெள்ளநீர் தோங்கி நிற்கிறது. இந்த நிலையில் கடந்த 6ம் தேதி கூடுவாஞ்சேரி, ஆதனூர், மண்ணிவாக்கம், வரதராஜபுரம், ஊரப்பாக்கம்  பகுதியில் அடையாறு கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் கணக்கீடு செய்து ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்கும் பணியை தொடங்கினார்கள். இந்த நிலையில் நேற்று 3வது நாளாக காஞ்சிபுரம் மாவட்ட சிறப்பு அதிகாரி அருண் தம்புராஜ் ஐ..எஸ் தலைமையில், கூடுவாஞ்சேரி, மாடம்பாக்கம், மண்ணிவாக்கம் விரிவு பகுதியில் உள்ள அடையாறு கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதில் காஞ்சீபுரம் கோட்டாச்சியா; ராஜூ ஸ்ரீபெரும்புதூர் தாசில்தார் ரமேஷ், செங்கல்பட்டு தாசில்தார் இப்ராகிம், வருவாய் ஆய்வாளர் கு.அரி, உள்பட பலர் உடன் இருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here