Home அரசியல் தமிழகத்தை தொழில்துறையில் முன்னோடி மாநிலமாக மாற்ற நடவடிக்கை விஜயகாந்த் வலியுறுத்தல்

தமிழகத்தை தொழில்துறையில் முன்னோடி மாநிலமாக மாற்ற நடவடிக்கை விஜயகாந்த் வலியுறுத்தல்

7
0
SHARE

சென்னை, நவ. 9& தமிழகத்தை தொழில் துறையில் முன்னோடி மாநிலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று  விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தேமுதி தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில். .தி.மு.க அரசு கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை சென்னையில் நடத்தினார்கள்உலக முதலீட்டாளர்களின் மாநாடு நடந்து முடிந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும், புதியதாக எந்த ஒரு தொழிற்சாலையும் துவங்கப்பட்டதாக தெரியவில்லை. மாநாடு முடிந்து இன்றுவரை தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில், எந்தெந்த முதலீட்டாளர்களால் எத்தனை தொழிற்சாலைகள் துவங்கப்பட்டன, எத்தனை இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு தரப்பட்டது என்பதை அதிமுக அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

போலியான ஒப்பந்தத்தை நம்பி மீண்டும் ஆட்சி பொறுப்பை ஜெயலலிதாவுக்கு வழங்கிய தமிழக மக்களும், வேலைவாய்ப்பின்றி தவிக்கின்ற இளைஞர்களும், இந்த ஏமாற்றத்தினால் வெறுப்படைந்துள்ளார்கள்ஆசியாவிலேயே தொழில்முனையும் களத்தில், தமிழகத்தை முதல் மூன்று இடத்திற்குள் கொண்டுவருவேன் என்ற ஜெயலலிதாவின் அரசில், தமிழகம் இன்றைக்கு இந்தியாவில் 12க்கும்,மேற்பட்ட இடத்திற்கு தள்ளப்பட்டதோடு மட்டுமல்லாமல், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை, உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி தமிழக இளைஞர்களுக்கு பல இலட்சம் வேலைவாய்ப்பை உருவாக்கி தருவேன் என்ற ஜெயலலிதாவின் அறிவிப்பு, இன்றுவரை வெற்று கானல் நீராக போய்கொண்டு இருக்கிறது.

ஜெயலலிதாவின் வழியில் ஆட்சி செய்துகொண்டு இருக்கிறோம் என்று சொல்லிக்கொண்டு இருக்கின்ற எடப்பாடி அரசு, மறைந்த ஜெயலலிதாவின் திட்டம், அவர் மறைந்ததோடு ஆட்சி அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்கு மட்டும் செயலாற்றிக்கொண்டு, தமிழக மக்களை வஞ்சித்துக்கொண்டு இருக்கிறார்கள்இனிமேலாவது பொய்யான அறிக்கைகளையும், அறிவிப்பையும் தராமல் இளைஞர்களுக்குவேலைவாய்ப்பை உருவாக்குகின்ற வகையில், தமிழகத்தை தொழில்துறையில் முன்னோடிமாநிலமாக மாற்ற உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனகேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here