Home சிறப்புச் செய்திகள் அரசு அலுவலகங்களுக்கு மின் இணைப்பு கட்…?

அரசு அலுவலகங்களுக்கு மின் இணைப்பு கட்…?

27
0
SHARE

மோடி அரசு ரூ500, ரூ1000 நோட்டு செல்லாது என்று அறிவித்து ஒரு வருடமாகிவிட்டது. இதனால் இந்தியா பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிவிட்டது. ரூ500, ரூ1000 நோட்டு செல்லாது அறிவிப்பால், பாதிக்கப்பட்டவர்கள் நடுத்தர மக்கள் மட்டுமே இதற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று தாத்தாவிடம் இளைஞர்கள் குமுறினார்கள்.. தாத்தா மெல்ல சிரித்துக் கொண்டே,செய்தி பக்கம் போனார்.

கேரள போலீசார் நக்சலைட்டை, விசாரணைக்கு அனுப்ப மறுப்பதால் கொடைக்கானல் போலீசார் திணறி வருகின்றனர், என்ன தாத்தா.இந்தியாவில்தான் தமிழ்நாடு இருக்கா தாத்தாதிண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில்  2008&ல் நவீன் பிரசாத் என்பவர் தலைமையில் நக்சலைட்கள் கொடைக்கானல் மலையில் முகாமிட்டனர். பாத்திரம், முறுக்கு விற்பனை செய்வது போல மலைவாழ் மக்களிடம் சென்று, அவர்களை மூளைச் சலவை செய்தனர்இதையறிந்த போலீசார் நவீன் பிரசாத்தை சுட்டுக் கொன்றனர். இவர்களுடன் ஆயுதப்பயிற்சி பெற்ற பரமக்குடியை சேர்ந்த காளிதாசை தேடி வந்தனர். இந்நிலையில் கோவை  கேரள எல்லையான அகழியில் கடந்த மாதம் கேரள போலீசார் காளிதாசை கைது செய்தனர்.

ஆயுதப்பயிற்சி வழக்கில் காளிதாசிடம் விசாரணை நடத்துவதற்கு, கொடைக்கானல் போலீசார் திட்டமிட்டு, நீதிமன்றத்திலும் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.  நக்சலைட்டை அழைத்துவர மலையாளம் அறிந்த எஸ்.., மற்றும் போலீசார் கேரளாவில் முகாமிட்டுள்ளனர். ஆனால் காளிதாஸ் மீது போலீசார்  துப்பாக்கிச் சூடு நடத்தியது, வெடி குண்டு வீச்சு, வெடிகுண்டு தயாரிப்பு, ஆயுதப்பயிற்சி உட்பட 8 க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

அவற்றின் மீதான விசாரணை முடிந்தால்தான் தமிழக போலீசிடம் ஒப்படைப்போம் என அடம் பிடிக்கின்றனர். இதனால் கொடைக்கானல் போலீசார் நக்சலைட் காளிதாசிடம் விசாரணை நடத்த முடியாமலும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடியாமலும் திணறி வருகின்றனர்அதே போல் கொடைக்கானலில்  ஆயுதப் பயிற்சி பெற்ற பகத்சிங் சேலத்தில் சுற்றித்திரிந்துள்ளார். இவரை போலீசார் என்கவுண்டர் செய்யப் போவதாக கிளம்பிய அச்சத்தில் சேலம் போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார், இவரை காவலில் எடுத்து விசாரிக்க கொடைக் கானல் போலீசார் திட்ட மிட்டுள்ளனர் என்று மூச்சுவிடாமல் சொல்லி முடித்தார் தாத்தா.

தமிழ்நாடுமின்சாரவாரியத்திற்குசுமார்ரூ30,000 கோடி கடன் இருக்கிறது. கடனுக்கு வட்டி கட்ட, கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் மின் கட்டணம் செலுத்தாமல் அலட்சியமாக உள்ள, அரசு துறை கட்டடங்களில், மின் இணைப்பை துண்டிக்க போவதாக, மின்சார வாரியம், ‘நோட்டீஸ்அனுப்பியுள்ளதுதமிழ்நாடு மின் வாரியம், கல்வி, காவல் என, அரசு துறைகளுக்கு, மின்சாரம் சப்ளை செய்கிறது. வீடுகளில், மின் பயன்பாடு கணக்கு எடுத்த, 20 தினங்களுக்குள் கட்டணத்தை செலுத்துவது போல், அரசு துறைகளும் செலுத்த வேண்டும். இல்லையெனில், மின் இணைப்பு துண்டிக்கப்படும். பின், அபராதத்துடன், கட்டணம் செலுத்தியதும், மின் சப்ளை தரப்படும். ஆனால், பல துறைகள், மின் கட்டணத்தை குறித்த காலத்தில் செலுத்தாமல், அலட்சியம் காட்டி வருகின்றன.

மின்சாரம்விற்பனைக்குஏற்ப, கட்டணத்தை வசூலிக்கும்படி, மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. ஆனால், பல அரசு துறைகள், மின் கட்டணத்தை செலுத்துவதில்லை. இதுதொடர்பாக, பல நினைவூட்டல் கடிதம் எழுதியும் பயனில்லை. எனவே, மின் கட்டணத்தை உடனே செலுத்துமாறும், இல்லையெனில், மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும், நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.   நோட்டீஸ் பெற்ற, ஏழு முதல், 14 நாட்களுக்குள் கட்டணத்தை செலுத்த வேண்டும். இல்லையெனில், மின் இணைப்பு துண்டிக்கப்படும். அதே முகவரியில் உள்ள கட்டடத்திற்கு, புதிய மின் இணைப்பு மற்றும் கூடுதல் மின் இணைப்பு வழங்கப்படாது என்றும், நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. அனேகமாக அரசு அலுவலகங்களில் விரைவில் மின்சாரம் இருக்காது, இனி மெழுகுவர்த்தி மூலம்தான் அரசு நிர்வாகம் நடக்கும் என்று கிண்டலாக சொல்லிவிட்டு, வீட்டுக்குள் சென்றார் தாத்தா..