Home தமிழகம் இன்று முதல் சென்னை மாநகராட்சிக்கு 650 மி.லி. குடிநீர் வழங்கப்படும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்

இன்று முதல் சென்னை மாநகராட்சிக்கு 650 மி.லி. குடிநீர் வழங்கப்படும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்

27
0
SHARE

சென்னை, நவ. 8& மாநகராட்சி பகுதிகளுக்கு இன்று முதல் 650 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்படும் என நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர்எஸ்.பி.வேலுமணி ஆய்வுக்கூட்டத்தில் தெரிவித்தார்.

நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர்,  தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல் ஆகியோர் வடகிழக்கு பருவமழையையட்டி சென்னை மாநகராட்சி மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து நேற்று சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

இது குறித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ரிப்பன் மாளிகையில் அலுவலர்களுடன் நடந்த ஆய்வுக்கூட்டத்திற்கு பின் தெரிவிக்கையில், சென்னை மாநகருக்கு தற்பொழுது விநியோகிக்கப்படும் குடிநீரின் அளவினை கூடுதலாக்கி விநியோகிக்க, இன்றுமுதல் வீராணம் ஏரியிலிருந்து நாளன்றுக்கு 120 மில்லியன் லிட்டர் குடிநீர் எடுக்கப்பட்டு, நாளை முதல் சென்னை மாநகருக்கு 650 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்படும்.  குடிநீர் செல்லும் குடிநீர் விநியோகக் குழாயின் கடைசிப் பகுதியிலும், குறைந்தபட்ச குளோரின் அளவு 0.2 பி.பி.எம். ஆக இருப்பதை உறுதி செய்தபின் குடிநீர் வழங்கப்படும்.

ஏரிகளின் இன்றைய நீர் இருப்பு பூண்டி ஏரியில் 656 மில்லியன் கன அடியும், சோழவரம் ஏரியில் 464 மில்லியன் கன அடியும், புழல் ஏரியில் 11152 மில்லியன் கன அடியும், செம்பரம்பாக்கம் ஏரியில் 1211 மில்லியன் கன அடியும், வீராணம் ஏரியில் 881 மில்லியன் கன அடியும் உள்ளது. 5 ஏரிகளின் மொத்தக் கொள்ளளவில் 35 விழுக்காடு நீர் மட்டுமே ஏரிகளில் வந்துள்ளது. அனைத்து ஏரிகளும் தமிழக அரசின் சார்பில் அலுவலர்கள் முழு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளார்கள்

ஆகையால் சமூக வலைதளங்களில் பரவும் தவறான செய்திகளை நம்ப வேண்டாம். சென்னை மாநகராட்சியில் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் வசதிக்கு நிரந்தர தீர்வாக ரூ.4034 கோடி மதிப்பீட்டில் புதிய மழைநீர் வடிகால்வாய்கள் அமைக்கப்படும் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்கள். அதனடிப்படையில், சென்னை மாநகராட்சியில் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்க விரிவான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

ரூ.1101.43 கோடி மதிப்பீட்டில் அடையாறு மற்றும் கூவம் வடிநிலப்பகுதிகளில் மழைநீர் வடிகால் கட்டும் பணிகள் 80 சதவீதம் முடிவுற்றுள்ளது. ரூ.1243.15 கோடி மதிப்பீட்டில் கோவளம் வடிநிலப்பகுதியில் 326 கி.மீ. நீளத்திற்கு மழைநீர் வடிகால் கட்டுவதற்கு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு ஜெர்மன் மேம்பாட்டு வங்கி நிதியுதவியுடன் செயலாக்கப்பட உள்ளது. எம்3 திட்டக்கூறு பணிகளுக்கான திட்ட அறிக்கையினை மேம்படுத்த முகறு வங்கியால் ஜெர்மன் நாட்டினை சேர்ந்த ஆள காக்ஸ் கன்ஸல்ட்டன்ட்ஸ் என்ற கலந்தாலோசகர் நியமனம் செய்யப்பட்டு, அந்நிறுவனம் தனது ஆய்வுகளை நடத்தி முடித்து பணிகளுக்கான ஒப்புதலை வழங்கும் நிலையில் உள்ளது. எம்1 மற்றும் எம்2 திட்டக்கூறுகளை பொறுத்தவரையில் (துரைப்பாக்கம், பெருங்குடி, பள்ளிக்கரணை, பாலவாக்கம், ஈஞ்சம்பாக்கம், காரப்பாக்கம் மற்றும் மடிப்பாக்கம்) ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ள விரிவான திட்ட அறிக்கை முகறு வங்கியினால் கூர்ந்தாய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

ரூ.1881.66 கோடி மதிப்பீட்டில் கொசஸ்தலையாறு வடிநிலப் பகுதியில் 426 கி.மீ. நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்க திருத்திய திட்ட அறிக்கை இறுதி செய்யும் பணிகள் முடிவுறும் நிலையில் உள்ளது. இப்பணிகளால் திருவொற்றியூர், மணலி, மாதவரம், கொளத்தூர், வில்லிவாக்கம், அம்பத்தூர், கொரட்டூர் ஆகிய பகுதிகளை சார்ந்த 15 இலட்சம் மக்கள் பயன்பெறுவார்கள். இப்பணிகள் முடிவுறும் தருவாயில் மழைநீர் தேங்குவதற்கான நிரந்தர தீர்வு காணப்படும்.  என்றார்.

இந்நிகழ்ச்சியில், சென்னை மாநகராட்சி ஆணையாளர் தா.கார்த்திகேயன், துணை ஆணையாளர் (பணிகள்) எம்.கோவிந்த ராவ், முதன்மை தலைமைப் பொறியாளர் எம்.புகழேந்தி, மேற்பார்வை பொறியாளர் (மழைநீர் வடிகால்துறை) எல்.நந்தகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here