Home தமிழகம் சமூக முன்னேற்றத்திற்கு பங்காற்றிய பெண் குழந்தைக்கு மாநில அரசு விருதுக்கு விண்ணப்பிக்கலாம் சென்னை கலெக்டர்...

சமூக முன்னேற்றத்திற்கு பங்காற்றிய பெண் குழந்தைக்கு மாநில அரசு விருதுக்கு விண்ணப்பிக்கலாம் சென்னை கலெக்டர் அறிவிப்பு

23
0
SHARE

சென்னை, நவ. 8& ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24&ந் தேதி சமூக முன்னேற்றத்திற்காக சிறப்பாக பங்காற்றும் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு மாநில அரசின் விருது வழங்கப்பட்டு வருகிறதுஅதன்படி சென்னை மாவட்டத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த பெண் குழந்தைகளுக்கு விருது வழங்கும் பொருட்டு கலெக்டரின் பரிந்துரையுடன் உரிய விண்ணப்பத்தினை அளிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களின் முன்னேற்றத்திற்காக சமூகநலன்  சார்ந்த நடவடிக்கைகள் மேற்கொண்டு பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் மேன்மையாக பணிபுரிந்த பெண் குழந்தைக்கு விருது வழங்க இருப்பதால் விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருதுகள் கீழ்க்கண்ட குறிப்புகளின் அடிப்படையில் ஆட்சியரின் பரிந்துரையுடன் அளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.5 வயதிற்கு மேல் 19 வயதிற்குட்பட்ட தமிழகத்தில் வசிக்கும் பெண் குழந்தை (31 டிசம்பர்) அன்றைய வயது.

பெண் கல்வி,பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு,பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல்,தற்காப்பு கலையில் மாநில அளவில் சான்று பெற்றிருத்தல்,வேறு ஏதாவது வகையில் சிறப்பான தனித்துவமான சாதனை செய்திருத்தல்,சமூக அவலங்கள் மற்றும் அதனை தீர்வு காண்பதற்கு புத்தகங்கள் மற்றும் கையேடுகள் எழுதி வெளியிட்டிருத்தல், ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்பது போன்ற செயல்களை பெண்களாலும் சாதிக்க முடியும் என சாதித்திருத்தல். மாநிலத்தில் ஒவ்வொரு வருடமும் மேற்காண் அம்சங்களில் சிறந்து விளங்கும் ஒரு பெண் குழந்தை தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு பாராட்டு பத்திரம் மற்றும் ரூபாய் ஒரு இலட்சத்திற்கான காசோலை வழங்கப்படும்.

மாநில அளவிலான தேர்வுக்குழு மூலம் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பங்களை ஆய்வு மேற்காண்டு விருதினை பெற உரிய நபரை தேர்ந்தெடுக்கப்படுவார்முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட திட்ட அலுவலர், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், மாவட்ட விளையாட்டு அலுவலர், காவல்துறை மற்றும் குழந்தைகளுக்காக பணிபுரியும் சிறந்த தொண்டு நிறுவனங்கள் ஆகியோர் பரிந்துரைக்கலாம்.

பரிந்துரையில் குழந்தையின் பெயர், தாய் தந்தை பெயர் முகவரி, ஆதார் எண், புகைப்படம் ஆகியவற்றுடன் குழந்தை ஆற்றிய அசாதாரன வீர, தீர செயல் மற்றும் சாதனைகள் ஆகியவற்றை ஒரு பக்கத்திற்கு மிகாத குறிப்பு மற்றும் அதற்கான ஆதாரங்கள் இணைக்கப்பட வேண்டும்நவம்பர் 20ம் தேதிக்குள் உரிய  பரிந்துரைகள் மாவட்ட சமூகநல அலுவலர் அலுவலகம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகம் 8வது தளம், சிங்காரவேலர்  மாளிகை, ராஜாஜி சாலை, சென்னை1. முகவரிக்கு அனுப்ப வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன்  தெரிவித்துள்ளார்.