Home அரசியல் கருணாநிதியுடன் பிரதமர் மோடி சந்திப்பு நல்ல நாகரீகம் கி.வீரமணி கருத்து

கருணாநிதியுடன் பிரதமர் மோடி சந்திப்பு நல்ல நாகரீகம் கி.வீரமணி கருத்து

24
0
SHARE

 சென்னை, நவ. 8& தி.மு.. தலைவர் கலைஞர் அவர்களை பிரதமர் சந்தித்து உடல் நலம் விசாரித்தது நல்ல நாகரிகமே அதனை ஊடகங்கள் அரசியல்படுத்துவது அதிகபடியான கற்பனையே என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னைக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, கோபாலபுரத்தில் தி.மு.. தலைவர் கருணாநிதியை சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்ததோடு, உடல் நலக் குறைவுடன் உள்ள தயாளுஅம்மாளிடமும் உடல் நலம் விசாரித்தார். இது நாகரிக அரசியல் பண்பாடே. தற்போதைய சூழலில் தமிழ்நாட்டில் வேண்டுமானால் இது வியப்பிற்குரிய செய்தியைப் போலத் தோன்றக் கூடும். வட நாட்டு அரசியலில் இந்தப் பண்பு ஒரு எடுத்துக்காட்டான சர்வ சாதாரணமான நிகழ்வுதான். நல்ல நாகரிக சந்திப்பை ஊடகங்கள் அரசியல் ஆக்குவது ஏன்? கொள்கையில் எதிரும் புதிருமாக இருப்பது வேறு.மனிதநேயத்தோடு பான்மையும் நட்புறவும் கொண்டு பழகுவது என்பது வேறு.

எதிர்ப்பவர்கள் எல்லாம் எதிரிகள் அல்லர்.அதுபோல பண்புடன் பழகுபவர்கள் எல்லாம் கொள்கையை விட்டு விட்டவர்களும் அல்லர். 2ஜி வழக்குத் தீர்ப்பு வருவதால் அச்சமயத்தில் இந்த சந்திப்பு எனவு கூறுவது அதிமுகவின் எதிர்க்கட்சியாக உள்ள திமுகவிடமும் ஒரு மென்மையான இடம் பிடிக்க இது உதவும்.திமுக அறிவித்த போராட்டம் ஒத்தி வைப்பு அல்லது கைவிடப்படுகிறது என்பதுபோன்ற பல்வேறு இனிய கற்பனைகளையும்,விமர்சனங்களை முன்வைக்கின்றன.

கடும்மழை காரணமாக எட்டு மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதே தவிர மற்ற மாவட்டங்களில் திட்டமிட்டப்படி ஆர்ப்பாட்டம் திமுக சார்பில் நடைபெற்றது. மத்தியில் ஆளும் பா... தமிழ்நாட்டில் உள்ள தி.மு.. இடையே ஒரு புது உறவு மலர இது முன்னோட்டமாக அமையக் கூடும் என்று எழுதி, தொண்டர்களைக் குழப்பிட இது ஒரு முயற்சி. இதில் யாரும் ஏமாறக் கூடாது. இதுபற்றி மு.. ஸ்டாலின் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டபோது ஒரு மரியாதை நிமித்தமான நலம் விசாரிப்பு என்று கச்சிதமாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அரசியல் பண்பாடும், நனி நாகரிகமும் தமிழ்நாட்டுத் தலைவர்கள் கட்சிகளிடையே தாராளமாகப் பரவி நடைமுறைக்கு வர வேண்டியது அவசர அவசியம்.இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.