Home அரசியல் ஆதித்தனார், சிவந்தி ஆதித்தனாரின் பெருமையை பிரதமர் மோடி கூறியது தமிழகத்திற்கு கிடைத்த பெருமை தமிழிசை...

ஆதித்தனார், சிவந்தி ஆதித்தனாரின் பெருமையை பிரதமர் மோடி கூறியது தமிழகத்திற்கு கிடைத்த பெருமை தமிழிசை சவுந்தரராஜன் தகவல்

18
0
SHARE

சென்னை, நவ. 8& தினத்தந்தியின் பெருமையும்,  ஆதித்தனார், சிவந்தி ஆதித்தனார் பெருமைகளையும் பிரதமர் குறிப்பிட்டது தமிழகத்திற்கு கிடைத்த பெருமை என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

பா...மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்ட அறிக்கையில், தினத்தந்தி நேற்று மிகப்பெரிய சரித்திரத்தை பதிவு செய்திருக்கிறது. அதில்பிரதமர் கலந்து கொண்ட நிகழ்ச்சி வரலாறு முக்கியத்துவம் வாய்ந்ததாக நிகழ்ந்திருக்கிறது.  தினத்தந்தியின் பவள விழா நிகழ்ச்சியில் தினத்தந்தியின் பெருமையும்,ஆதித்தனார்,சிவந்தி ஆதித்தனார் பெருமைகளையும் பிரதமர் குறிப்பிட்டது நம் தமிழகத்திற்கு கிடைத்த பெருமை. தந்தி எனும் தமிழ்ப்பத்திரிகைக்கு பெருமை சேர்த்து பிரதமர் தமிழுக்கு பெருமை சேர்த்திருக்கிறார்.

அதுமட்டுமல்ல, தினத்தந்தி விழாவில் ஒட்டுமொத்த தமிழக பிரபலங்களும் ஒன்று கூடி வாழ்த்தியிருப்பது தந்தி மீது காட்டியிருக்கும் பாசத்தையும், அத்தனைப் பெரியவர்களும் தந்தி மீது அவர்கள் காட்டும் பாசத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறது. ஊடகத்துறையில் முன்னுதாரணமாகத் திகழ்ந்தது மட்டுமல்லாமல் ஓர் முன்னுதாரணமாக பவள விழா நிகழ்ச்சியையும் நடத்திக் காட்டியிருந்த தினத்தந்தி அதிபர் பாலசுப்பிரமணிய ஆதித்தனார் தனது வாழ்த்துக்கள். தினத்தந்திக்குக் கிடைத்த பெருமை தங்களுக்குக் கிடைத்த பெருமையாக அத்தனை ஊடகங்களும் வெளியிட்டு மகிழ்ந்திருப்பதற்கு அத்தனை ஊடகங்களுக்கும் எனது பாராட்டையும் வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்வதாக தெரிவித்துள்ளார்.