Home தமிழகம் பாலிடெக்னிக் கல்லூரிக்கான விரிவுரையாளர் தேர்வு முடிவு வெளியீடு 23 முதல் 25 வரை சான்றிதழ்...

பாலிடெக்னிக் கல்லூரிக்கான விரிவுரையாளர் தேர்வு முடிவு வெளியீடு 23 முதல் 25 வரை சான்றிதழ் சரிபார்ப்பு

44
0
SHARE

சென்னை, நவ.8& பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணிபுரிவதற்கான விரிவுரையாளர் போட்டி எழுத்து தேர்வு முடிவு வெளியிடப்பட்டு, வரும் 23 முதல் 25 வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2017&18ம் ஆண்டிற்கான அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் காலிப் பணியிடங்களுக்கான நேரடி நியமன பணித் தேர்விற்கு 1058 காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு, 16.9.2017 போட்டி எழுத்து தேர்வு நடைபெற்றதுஅதன் பின்னர் 6.10.2017 அன்று தற்காலிக விடைக்குறிப்பு வெளியிடப்பட்டது.

அதன் பின்னர் தேர்வர்களிடமிருந்து ஆட்சேபணைகள் பெறப்பட்டு பாட வல்லுனர்களை கொண்டு கூர்ந்தாய்வு செய்யப்பட்டு இறுதி விடைக்குறிப்பு தாயார் செய்யப்பட்டு அதன் அடிப்படையில் விடைத்தாள் மதிப்பீடு செய்யப்பட்டு தேர்வர்கள் அவர்களின் மதிப்பெண்களை தெரிந்து கொள்ளும் வகையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் ஷ்ஷ்ஷ்.tக்ஷீதீ.tஸீ.ஸீவீநீ.வீஸீ என்ற  இணையத்தளத்தில்  வெளியிடப்பட்டுள்ளது.

இதில் மாற்றுத்திறனாளிகளுக்கான 4 விழுக்காடு இட ஒதுக்கீடு முன்னுரிமைக்கான காலிப்பணியிடம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுபோட்டி எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் இனவாரியான இட ஒதுக்கீட்டின்படி தகுதியுள்ளவர்கள் ஒரு பணியிடத்திற்கு 2 பேர் வீதம் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட உள்ளனர். சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 23 ந் தேதி முதல் 25 ந் தேதி வரை 3 நாட்கள் நடைபெற உள்ளதுஇதற்கான விவரங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.