Home சிறப்புச் செய்திகள் மழை பெய்தும் தலை விரித்தாடும் குடிநீர் பஞ்சம்…

மழை பெய்தும் தலை விரித்தாடும் குடிநீர் பஞ்சம்…

29
0
SHARE

முதலமைச்சர் பழனிச்சாமி பாவம், மேடையில், பொது இடங்களில்  உளறாதீர்கள் என்று அமைச்சர்களுக்கு அட்வைஸ் சொன்ன முதல்வர் பவள விழா மேடையில் துணை முதல்வர் ஒ.பழனிச்சாமி அவர்களே என்று கூறியது, பார்வையாளர்களை அதிர்ச்சியடைய வைத்தது. ஆனால் இல.கணேசன் உள்ளிட்ட சிலர் சிரித்துவிட்டார்கள் என்று செய்தியுடன் இளைஞர்களிடம் பேச தொடங்கினார் தாத்தா.

வெள்ள சேதத்தை பார்வையிட வரும் அமைச்சர்கள், கட்சியினருக்கு தகவல் தெரிவிப்பதில்லைஎன, .தி.மு..,  எம்.பியும் பன்னீர்செல்வம் அணியில் இருந்த மைத்ரேயன், தன் முகநூல் பக்கத்தில் முணு முணுத்துள்ளார்.  ஒரு வாரமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், மழையால் மக்கள் பாதிப்படைந்துள்ளனர். அமைச்சர்களும், அதிகாரிகளும், தக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.ஆனால், அமைச்சர்கள் வருகை குறித்து, பொறுப்பாளர்கள் எந்த தகவலும் தருவதில்லை என்பது, கட்சி தொண்டர்களின் ஆதங்கமாக  உள்ளது. ஏன், எனக்கே எந்த தகவலும் இல்லை.

தொண்டர்களுக்கு ஒரு வேண்டுகோள். அவரவர், தங்கள் பகுதிகளில், தங்களால் இயன்ற அளவு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு, உதவி செய்யுங்கள்.’மக்களால் நாம்; மக்களுக்காக நாம்என்ற, ஜெ.,வின் தாரக மந்திரத்தை, மனதில் கொள்ளுங்கள். மக்கள், உங்களை அங்கீகரித்தால், இன்று உங்களை புறக்கணிப்போர், பிற்காலத்தில் உங்களை தேடி வருவர். மக்கள் பணியே, மகேசன் பணி என்றார்  மைத்ரேயன். போதும்உங்கள் உள் கட்சி சண்டை என்று இளைஞர்கள் முணு முணுக்க அடுத்த செய்திக்கு சென்றார் தமிழ் தாத்தா.

  வருமானம் வராத துறைகளை மூட முடிவு..இளைஞர்கள் முந்திரிக்கொட்டை போல், வருமானம் வராத துறையா,கமிசன் வராத துறையா என்று தாத்தாவிடம் கிண்டல் செய்தார்கள்.. தாத்தா சிரித்துக் கொண்டே நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்கிறேன் நிர்வாக சீரமைப்பு காரணமாக, தமிழகத்தில் உள்ள வீட்டு வசதி சங்கங்களின் எண்ணிக்கை, 860ல் இருந்து, 285 ஆக குறைக்கப்படுகிறது. அதனால், 575 சங்கங்கள் கலைக்கப்பட உள்ளனதமிழகத்தில், ஏழை, எளிய மக்கள் குறைந்த விலையில், வீடு, மனை பெறுவதற்காக, கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்கள் துவக்கப்பட்டன. இவற்றின், நிதி நிர்வாக நடைமுறையில், காலத்துக்கு ஏற்ப மாற்றங்கள் செய்யாததால், நிலுவை தொகை அதிகமாகி, சங்கங்கள் செயல்பட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில், இச்சங்கங்களின் செயல்பாடு குறித்து, துணை முதல்வர் பன்னீர்செல்வம், சமீபத்தில் ஆய்வு செய்தார். அப்போது, தாலுகாவுக்கு ஒரு சங்கம் செயல்படும் வகையில், அவற்றை ஒருங்கிணைத்து, நிர்வாக செலவுகளை குறைக்க உத்தரவிட்டார்.  துணை முதல்வர் உத்தரவை அடுத்து, தமிழகத்தில் உள்ள, 860 சங்கங்களின் நிர்வாக செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. மேலும், ரூ50 லட்சம்  குறைவாக நிலுவையில் உள்ள சங்கங்களின் பட்டியலும் தயாரிக்கப்பட்டு வருகிறது.  860 ஆக உள்ள கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களின் எண்ணிக்கை, விரைவில், 285 ஆக குறைக்கப்படும் போதுமா என்றார் தாத்தா.

   வரலாறு காணாத குடிநீர் பஞ்சத்தில், நடப்பாண்டு சென்னை மாநகரம் தவித்தது. குடிநீர் தட்டுப்பாடு காரணமாக, புறநகர் உள்ளாட்சிகளுக்கும், குடிநீர் வினியோகத்தை வாரியம் நிறுத்தியது. வணிக நிறுவனங்களுக்கும், குடிநீர் விற்பனை நிறுத்தப்பட்டது. இந்த பஞ்சத்தில் இருந்து மீள, இந்த ஆண்டு பருவ மழை கைகொடுக்கும் என, அதிகாரிகள் நம்பினர்அதற்கு ஏற்ப, வடகிழக்கு பருவ மழை துவக்கத்திலேயே, நான்கு நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கியது. ஆனால், பெய்த மழையாவும், கடலோர பகுதிகளை மட்டும் அடித்து துவம்சம் செய்துவிட்டு, ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில், அளவாக பெய்துவிட்டு சென்றது.

இந்த நான்கு நாட்கள் மழைக்கு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள குடிநீர் ஏரிகளின் நீர்மட்டம் பெரிய அளவில் உயரவில்லை. ஒட்டுமொத்தமாக, 3,185 மில்லியன் கன அடி மட்டுமே,  நீர் இருப்பு உள்ளது. தற்போதைய நீர்வரத்தை வைத்து கணக்கிட்டால், பருவ மழையில், ஏரிகள் முழு கொள்ளளவை எட்ட வாய்ப்பு குறைவு.தவிப்புதொடர்ந்து கனமழை பெய்தால் மட்டுமே, குடிநீர் ஏரிகள் முழு கொள்ளளவை எட்டும் என, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால் பருவமழையால் தான் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்கவும், குடிநீர் வாரியத்தை காப்பற்றவும் முடியும் என, குடி நீர் வடிகால் வாரிய அதிகாரிகள் புலம்பல் கோட்டைக்கு கேட்கவில்லை. நம் காதில் விழுந்தது சொல்லிவிட்டோம்..இனி முடிவு எடுக்க வேண்டியது அரசாங்கம் என்றபடி தாத்தா  இரு சக்கரவாகனத்தில் புறப்பட்டார்.