Home மற்றவை திருவள்ளூர் அருகே ஏரியின் மதகு உடைப்புமர்ம நபருக்கு வலை வீச்சு

திருவள்ளூர் அருகே ஏரியின் மதகு உடைப்புமர்ம நபருக்கு வலை வீச்சு

4
0
SHARE

திருவள்ளூர், நவ. 7&

திருவள்ளூரை அடுத்துள்ளது மேல்நல்லாத்தூர் கிராமம். இங்கு 120 ஏக்கர் பரப்பளவில் மேல்நல்லாத்தூர் பட்டரை ஏரி உள்ளது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரிமூலம், 300 ஹெக்டேர் விளைநிலத்தில் சாகுபடி நடைபெறுவது வழக்கம். பல ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த பருவ மழையால் ஏரி நிரம்பி வருகிறது.  இந்த ஏரியிலிருந்து 3 மதகுகளின் வழியே விளை நிலங்களுக்கு தண்ணீர் திறந்து விடுவது வழக்கம்.

இந்த ஏரிக்கு அருகில் தனியார் தொழிற்சாலை ஒன்று உள்ளது. ஏரியில் இருந்து தண்ணீர் செல்லும் கால்வாய் ஒன்றை தொழிற்சாலை நிர்வாகத்தினர் ஆக்கிரமித்து அடைத்து விட்டனர். இதனால், நிரம்பிய ஏரியில் இருந்து தண்ணீர் தொழிற்சாலைக்குள் புகுந்துவிடும் நிலை ஏற்பட்டது. அதனால், சில மர்ம நபர்கள் ஏரியில் தண்ணீர் தேங்க விடாமல் மதகு ஒன்றினை உடைத்து தண்ணீரை வெளியேற்றி உள்ளார்கள்.

இதனால், அப்பகுதி விவசாயிகள் இந்த ஏரியை நிர்வகித்து வரும் பொதுப்பணித் துறையினரிடம் புகார் செய்தனர். மேலும், தனியார் தொழிற்சாலையின் ஆக்கிரமிப்புகளை மீட்டு, சுற்று வட்டார விவசாயிகள், ஏரி நீரால் பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here