Home அரசியல் கோபாலபுரம் இல்லத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார் பிரதமர்

கோபாலபுரம் இல்லத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார் பிரதமர்

29
0
SHARE

சென்னை, நவ. 7& தி.மு.க. தலைவர் கருணாநிதியை பிரதமர் மோடி நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.

தமிழகத்திற்கு நேற்று தினத்தந்தியின் பவளவிழாவில் கலந்துக் கொள்வற்காக பிரதமர் மோடி நேற்று சென்னை வந்தார். விழாவில் கலந்துக் கொண்ட பின்னர், பிரதமர் மோடி  தமிழகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அலுவலர் டி.வி. சோமநாதன் மகள் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

பின்னர்  கோபாலபுரம் சென்ற  பிரதமர் மோடி  அங்கு தி.மு.க. தலைவர்  ருணாநிதியை  சந்தித்து உடல் நலம் விசாரித்தார். மேலும் தயாளு அம்மாளின் உடல்நலம் குறித்தும் விசாரித்தார். அப்போது தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், மத்திய இணை  அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி தனது வீட்டிற்கு நேரில் வந்து சந்தித்த பிரதமர் மோடிக்கு, கருணாநிதி எழுதிய குறளோவியம் (ஆங்கிலப் பதிப்பு) மற்றும் முரசொலி பவள விழா மலர் ஆகிய புத்தகங்களை பரிசாக வழங்கினார்.அப்போது தி.மு.க. செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி.,  தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரைமுருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்திப்பதற்காக கோபாலபுரம் வந்த பிரதமர் மோடிக்கு மு.க ஸ்டாலின் பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.  பின்னர் கோபாலபுரத்திற்கு வந்துள்ள தொண்டர்களை காண தி.மு.க. தலைவர் கருணாநிதி வீட்டிலிருந்து வெளியே வந்தார். அங்கு அவர் தொண்டர்களை பார்த்து கையை அசைத்து  புன்னகைத்தார். இதனை கண்ட தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்தனர்.

பிரதமருடனான சந்திப்பு குறித்து கனிமொழி எம்.பி. கூறியதாவது:

டெல்லியில் உள்ள தனது வீட்டில் ஓய்வு எடுக்க தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு  பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். தி.மு.க. தலைவர் கருணாநிதியை பிரதமர் மோடி சந்தித்ததில் அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை. பிரதமர் மோடிக்கு கருணாநிதி நன்றி  என கூறியதாக தெரிவித்தார்.