Home மற்றவை கடலோர மாவட்டங்களில் 24 மணி நேரத்துக்கு மழை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

கடலோர மாவட்டங்களில் 24 மணி நேரத்துக்கு மழை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

15
0
SHARE

சென்னை,நவ.7& தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழையாக கொட்டி தீர்த்தது. தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அதிக மழை பெய்து பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான தாம்பரம், முடிச்சூர், வேளச்சேரி, கொளத்தூரில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் புகுந்திருக்கிறது. இந்த பகுதிகளில் தேங்கி நிற்கும் மழைநீர் 8 நாட்களாகியும் இன்னும் அகற்றப்படாமலும் வடியாமல் இருக்கின்றது.

குறிப்பாக பல பகுதிகளில் மழைநீருடன் கழிவுநீர் சூழ்ந்து துர்நாற்றம் வீசுவதுடன் மோசமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்ததுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதுசென்னையில் வழக்கத்தை விட் 93 சதவீதம் மழைப்பொழிவு அதிகமாக  பெய்துள்ளது. அதே போன்று டெல்டா மாவட்டங்களிலும் கனமழை பெய்து விவசாய நிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.தலைஞாயிறு,வேதாரண்யம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடைவிடாது பெய்த அடைமழையால் சம்பா சாகுபடி செய்யப்பட்ட அனைத்து நெல் வயல்களும் நீரில் மூழ்கின. மழை வேண்டும் என எதிர்பார்த்த விவசாயிகள் அதிக மழையால் தற்போது பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு இயக்குநர் பாலசந்திரன், குமரிகடல் முதல் தென்மேற்கு வங்கடல் வரை இருந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவிழுந்துள்ளது. மேலும், வங்க கடலில் இலங்கை அருகே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதுஇதனால் அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் மழை பெய்யும். கன மழையை பொறுத்தவரை தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கன மழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை ஆனைக்காரன்சத்திரத்தில் 19 செ.மீ மற்றும் சிதம்பரத்தில் 15 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. வடகிழக்கு பருவ மழை வழக்கமாக 23 செ.மீ மழைக்கு பதில் 1 செ.மீ குறைந்து 22 செ.மீ மழை பெய்துள்ளது. இவ்வாறு பாலசந்திரன் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here