Home மற்றவை ஐ.சி.டி., தமிழக அரசு இணைந்து நடத்தும் கனெக்ட் 2017 மாநாடு அமைச்சர்கள் பங்கேற்பு

ஐ.சி.டி., தமிழக அரசு இணைந்து நடத்தும் கனெக்ட் 2017 மாநாடு அமைச்சர்கள் பங்கேற்பு

15
0
SHARE

சென்னை, நவ. 7&

தகவல் மற்றும் செய்தித்தொடர்பு தொழில்நுட்பம் குறித்த வருடாந்திர மாநாடு

மற்றும் விரித்துரைப்பு கண்காட்சியை இந்திய தொழில் கூட்டமைப்பானது (.சி.டி), தமிழ்நாடு அரசுடன் ஒருகிணைந்து, ‘கனெக்ட் 2017 ‘என்ற பெயரில் நேற்று சென்னையிலுள்ள தாஜ் கோரமண்டலில் வளாகத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் மற்றும் தொழில்த்துறை அமைச்சர் சம்பத்தும் கலந்துகொண்டனர்.

புதிய யுகத்திற்காக தொழில்நுட்பத்தை உகந்தவாறு பயன்படுத்தல்என்ற மையக்கருத்து கொண்ட இந்த இரண்டு நாள் மாநாடானது, இம்மாநிலத்தின் தகவல் மற்றும் செய்தித்தொடர்பு தொழில்நுட்ப சூழலமைப்பை ஊக்குவிப்பதையும் மற்றும் இத்தொழில்துறைக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக கொள்கை கட்டமைப்புகளை உகந்தவாறு பயன்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டிருக்கிறது.

மேலும், வளர்ந்துவரும் சூழலமைப்பை ஒழுங்குமுறையோடு சீர்படுத்துவதற்கு சாதகமான கொள்ளைகளின் முக்கியத்துவம் குறித்தும் மற்றும் தமிழ்நாட்டில் ஐ.சி.டி தொழிற்துறையின் வளர்ச்சியை இன்னும் வலுப்படுத்தக்கூடிய புத்தாக்கங்களை ஊக்குவிப்பதற்குரிய அவசியம் குறித்தும் இம்மாநாடு வலியுறுத்தியது.

இது குறித்து சி..ஐ கனெக்ட் 2017 மாநாட்டின் தலைவர் ரவி விஸ்வநாதன் பேசுகையில், 16 ஆண்டுகளாக வெற்றிகரமாக இதனை நடத்திய கடந்த கால வரலாற்றை கொண்டிருப்பதால், அதிக வெற்றிகரமான முனைப்புத்திட்டமாகவும், பல குறிப்பிடத்தக்க மைல்கற்களை எட்டியிருப்பதன் மூலம் கௌரவத்தையும் நம்பகத்தன்மையையும் ஈட்டிய நிகழவாகவும் ஒரு மாநாடாக கனெக்ட் புகழ் பெற்றிருக்கிறது என்று உறுதியாக கூறலாம்.

இது தொடங்கப்பட்டதிலிருந்து, புதிய ஐ.டி கொள்கை, 2 மற்றும் 3ம் நிலை நகரங்களில் ஐ.டி பூங்காக்கள், .டி தொழில் அமைவிடங்கள் மற்றும் சிறப்பு ஏற்றுமதி மண்டலங்கள் உருவாக்குதல் போன்ற முக்கியமான முனைப்பு திட்டங்களுக்கு தொழில்துறை அரசுக்கிடையே தொடர்பை உருவாக்கி வளர்ப்பதன் வழியாக கனெக்ட் மாநாடு ஒரு முக்கிய பங்காற்றியுள்ளது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here