Home சினிமா சந்தானம் படத்தில் ஹரிஷ் கல்யாண் பாடுகிறார்

சந்தானம் படத்தில் ஹரிஷ் கல்யாண் பாடுகிறார்

18
0
SHARE

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது ஹரிஷ் ஒரு போட்டியின் போது சிம்பு போல செய்து அசத்தியிருப்பார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பின்னர் சிம்புவை நேரில் சந்தித்தார்.

சிம்பு அவருக்கு புத்தகம் ஒன்றை பரிசாக வழங்கி தொடங்கிய இடத்தை மறக்க வேண்டாம் என்ற வாசகத்தை எழுதி அதை பரிசாக வழங்கியிருந்தார். இந்நிலையில், இசையமைப்பாளராக சிம்பு அறிமுகமாகியிருக்கும், சந்தானத்தின் `சக்க போடு போடு ராஜாபடத்தின் தொடக்க பாடலை ஹரிஷ் பாடியிருப்பதாக அவரே டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே யுவன் ஷங்கர் ராஜா, அனிருத் பாடிய பாடல்கள் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற நவம்பர் 14&ம் தேதி நடைபெற இருக்கிறது. அதனைத் தொடர்ந்து படம் வருகிற டிசம்பர் மாதம் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.