Home சினிமா பாலியல் தொந்தரவு& தமன்னா

பாலியல் தொந்தரவு& தமன்னா

21
0
SHARE

ஒவ்வொரு கட்டத்திலும் சினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கும் சம்பவம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.  இதை பல நடிகைகள் வெளிப்படையாக சொல்லியும் எந்த பலனும் இருப்பதில்லை. சமீபத்தில் தமன்னா இதனை ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

‘‘சினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் தொந்தரவுகள் இருப்பது உண்மைதான். மற்ற நடிகைகள் சொல்லித்தான் இது எனக்கு தெரிந்தது. ஆனால் எனது வாழ்க்கையில் அதுபோன்ற சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை.

நாம்தேர்ந்தெடுக்கும்வழியைபொறுத்துதான்நல்லதும்கெட்டதும்வருகின்றனஎன்பதுஎனதுகருத்து.

2005ம் ஆண்டு தெலுங்கில் ஸ்ரீ என்ற படத்தில் அறிமுகமானேன். 12 வருடங்களாக சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறேன். சினிமாவுக்கு வந்த புதிதில் இருந்து இப்போதுவரை தவறான கண்ணோட்டத்தோடு என்னை யாரும் அணுகவில்லை.

நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் தென்னிந்திய படங்களில் மட்டுமன்றி இந்தி திரையுலகிலும் இருக்கிறது.

சில நடிகைகள் அதை வெளியில் சொல்லி விடுகிறார்கள். இன்னும் சிலர் சொல்வது இல்லைஎன்று கூறியிருக்கிறார்.